For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2020 ஐபிஎல் அட்டவணை.. எந்த சானலில் பார்ப்பது? போனில் பார்க்க முடியுமா? முழு தகவல்கள்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளது. அந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த சீசனில் மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தலா இரண்டு முறை மற்ற ஐபிஎல் அணியுடன் லீக் சுற்றில் மோத உள்ளன.

லீக் சுற்றுக்கான அட்டவணையை மட்டுமே பிசிசிஐ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2020 :மும்பை இந்தியன்சின் பலம்.. சிஎஸ்கேவின் பலவீனம்.. சொல்கிறார் கவுதம் கம்பீர் ஐபிஎல் 2020 :மும்பை இந்தியன்சின் பலம்.. சிஎஸ்கேவின் பலவீனம்.. சொல்கிறார் கவுதம் கம்பீர்

ஏன் இந்த முடிவு?

ஏன் இந்த முடிவு?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதன் முறையாக ஒரு ஐபிஎல் தொடர் முழுவதும் வெளிநாட்டில் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ.

பயிற்சி

பயிற்சி

எட்டு ஐபிஎல் அணிகளும் கடந்த ஒரு மாதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டு பயிற்சி செய்து வந்தன. தற்போது போட்டிகள் துவங்க உள்ளன. முதல் போட்டி செப்டம்பர் 19 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே அபுதாபியில் நடைபெற உள்ளது.

மூன்று நகரங்கள்

மூன்று நகரங்கள்

லீக் சுற்றின் கடைசிப் போட்டி நவம்பர் 3 அன்று நடைபெற உள்ளது. நவம்பர் 10 அன்று இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபுதாபி என மூன்று நகரங்களில் நடைபெறும். சனி, ஞாயிறுகளில் மட்டும் இரண்டு போட்டிகள் நடைபெறும்.

போட்டி நேரம்

போட்டி நேரம்

மாலை துவங்கும் போட்டி 3.30 மணிக்கும், இரவுப் போட்டி 7.30 மணிக்கும் துவங்கும். நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

எப்படி பார்க்கலாம்?

எப்படி பார்க்கலாம்?

2020 ஐபிஎல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இலவசமாக பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் என பல்வேறு சானல்களில் ஐபிஎல் தொடரை காணலாம்.

போனில் பார்க்க முடியுமா?

போனில் பார்க்க முடியுமா?

டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலி மூலம் தொலைபேசியிலும் அல்லது ஹாட்ஸ்டார் இணையதளம் மூலம் தொலைபேசி அல்லது கணினி பிரவுசரிலும் 2020 ஐபிஎல் தொடரை பார்க்க முடியும். ஆனால், அதற்கு சந்தா செலுத்த வேண்டும். ஹாட்ஸ்டார் விஐபி திட்டத்தில் ஆண்டு சந்தா ரூ.399 அல்லது ஹாட்ஸ்டார் ப்ரீமியம் திட்டத்தில் ஆண்டு சந்தா ரூ.1499 செலுத்த வேண்டும்.

ஐபிஎல் அட்டவணை

ஐபிஎல் அட்டவணை

லீக் சுற்றில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் மற்ற ஏழு அணிகளுடன் இரண்டு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 2020 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, September 18, 2020, 21:02 [IST]
Other articles published on Sep 18, 2020
English summary
IPL 2020 Schedule : How to watch IPL 2020? Which Channel telecast IPL 2020 live? How to watch IPL 2020 in smartphone? Find all you want to know.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X