For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2020 ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியானது.. முதல் போட்டியில் மும்பை - சிஎஸ்கே.. முழு விவரம் இங்கே!

துபாய் : 2020 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.

Recommended Video

IPL 2020 போட்டிகளுக்கான Schedule வெளியிடப்பட்டுள்ளது

எட்டு ஐபிஎல் அணிகள் மோதும் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளது.

முதல் போட்டியில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டபடி மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகல்.. 2 முக்கிய வீரர்களை இழந்த சிஎஸ்கே.. பரபர தகவல்!ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகல்.. 2 முக்கிய வீரர்களை இழந்த சிஎஸ்கே.. பரபர தகவல்!

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது பிசிசிஐ. வைரஸ் பாதிப்பு வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரவாமல் இருக்க பிசிசிஐ கடும் விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.

பிசிசிஐ தாமதம்

பிசிசிஐ தாமதம்

போட்டி அட்டவணையை கடந்த மாதமே பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ பல்வேறு காரணங்களால் ஐபிஎல் போட்டி அட்டவணையை வெளியிடாமல் தாமதம் செய்து வந்தது. அதனால், ஐபிஎல் அணிகள், ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.

அட்டவணை வெளியீடு

அட்டவணை வெளியீடு

இந்த நிலையில், இன்று 2௦20 ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ. லீக் சுற்றுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது. செப்டம்பர் 19 அன்று முதல் போட்டியும், நவம்பர் 3 அன்று லீக் சுற்றின் கடைசி போட்டியும் நடைபெற உள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

செப்டம்பர் 19 அன்று அபுதாபியில் நடைபெற உள்ள முதல் போட்டியில் கடந்த சீசன் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், அதற்கு முந்தைய சீசன் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ சந்திக்க உள்ளது. இந்த போட்டியைத் தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர்.

போட்டி நேரம்

போட்டி நேரம்

சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் இரண்டு போட்டிகள் நடைபெறும். மற்ற நாட்களில் ஒரு போட்டி மட்டுமே நடைபெறும். முதல் போட்டி இந்திய நேரப்படி 3.30 மணிக்கும் (உள்ளூர் நேரம் 2 மணி), இரவுப் போட்டி 7.30 மணிக்கும் (உள்ளூர் நேரம் 6 மணி) துவங்கும்.

மூன்று மைதானம்

மூன்று மைதானம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று மைதானங்களில் நடைபெற உள்ளது. துபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெற உள்ளன. பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என பிசிசிஐ கூறி உள்ளது.

சிஎஸ்கே போட்டிகள்

சிஎஸ்கே போட்டிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செப்டம்பர் 19 அன்று தன் முதல் போட்டியில் ஆட உள்ளது. நவம்பர் 1 அன்று தன் கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்திக்க உள்ளது. லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

முழு அட்டவணை

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு ஐபிஎல் அணியும் மற்ற ஏழு அணிகளுடன் இரண்டு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 2020 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, September 6, 2020, 17:32 [IST]
Other articles published on Sep 6, 2020
English summary
IPL 2020 schedule released. Here is the full IPL 2020 match list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X