For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் உள்ளே வந்தார்.. சிக்கல் தொடங்கியது.. ரோஹித் சர்மாவிற்கு போடப்பட்ட கேட்.. கோலி என்ன செய்தார்?

துபாய்: இந்திய அணியின் தேர்வுக்குழு அனுபவம் இல்லாமல் இருந்ததே தற்போது தேர்வில் நடைப்பெற்று இருக்கும் குழப்பங்களுக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் தொடருக்கு பல இளம் இந்திய வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.

அதிலும் ஆச்சர்யமாக இந்திய அணியின் துணை கேப்டனாக கே. எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இந்த முறை ரோஹித் சர்மா அணியில் இடம்பெறவில்லை.

அணியில் இல்லை

அணியில் இல்லை

இந்திய அணியில் ரோஹித் சர்மா உட்பட பல மும்பை வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக தென்னிந்திய வீரர்கள் பலருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இருந்த மும்பை ஆதிக்கம் பெரிய அளவில் குறைந்து உள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்திய அணியின் கேப்டன் கோலிதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. கோலி சொல்லித்தான் ரோஹித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று தகவல்கள் வந்தது. ஆனால் உண்மையில் இதில் கோலியின் செயல் எதுவுமே இல்லை. இது முழுக்க முழுக்க தேர்வுக்குழுவின் முடிவு என்கிறார்கள்.

தேர்வுக்குழு

தேர்வுக்குழு

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் ஜோஷி தேர்வாகி உள்ளார். இவர் தேர்வுக்குழு தலைவரான பின் தேர்வு செய்யப்படும் முதல் இந்திய அணி இதுதான். முதல் தேர்வே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

எப்படி

எப்படி

கர்நாடகாவை சேர்ந்த இவர் அந்த மாநில கிரிக்கெட்டில் மிக முக்கியமான நபர். இவர்தான் இந்த முறை இந்திய கிரிக்கெட் அணியில் தென்னிந்தியர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். முக்கியமாக ரோஹித் சர்மா மற்றும் மும்பை லாபிக்கு செக் வைக்கும் வகையில் மும்பை வீரர்கள் பலரை புறக்கணித்தார்.

நெருக்கம்

நெருக்கம்

முதல் முறையாக அணி தேர்வு சமமாக நடந்துள்ளது. இதுதான் மும்பை லாபிக்கு கோபம் ஏற்பட காரணம் என்கிறார்கள்.சுனில் ஜோஷிக்கு கோலி மிகவும் நெருக்கம் ஆனவர். பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கும் கோலி சுனில் ஜோஷியை பல முறை சந்தித்து உள்ளார். இந்த நிலையில்தான் சுனில் ஜோஷியின் அணி தேர்வை கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Story first published: Saturday, October 31, 2020, 10:08 [IST]
Other articles published on Oct 31, 2020
English summary
IPL 2020: Selection committe is the only reason for exclusion of Rohit and other Mumbai players
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X