For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவுக்கு தோனின்னா எங்களுக்கு இவர்.. இது எப்படி இருக்கு? ஜாம்பவானை கூட்டி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் வெற்றி பெற வாய்ப்பு உள்ள அணிகளை வரிசைப்படுத்தினால் முதல் நான்கு இடங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடம் பெறுவது சந்தேகமே.

இந்த நிலையில், அந்த அணி தங்களின் முதல் கேப்டனை மீண்டும் களமிறக்கி உள்ளது. தோனி போல அவர் தங்கள் அணியை கோப்பை வெல்ல வைப்பார் என நம்புகிறது அந்த அணி.

 யுஎஸ் ஓபன் 2020 : பரபரப்பான இறுதிப்போட்டி... டொமினிக் தீம் முதல் கிராண்ட் ஸ்லாம் வெற்றி யுஎஸ் ஓபன் 2020 : பரபரப்பான இறுதிப்போட்டி... டொமினிக் தீம் முதல் கிராண்ட் ஸ்லாம் வெற்றி

ஷேன் வார்னே

ஷேன் வார்னே

ஆம், ஷேன் வார்னேவை ஒரேடியாக அணியில் விளம்பர தூதர் மற்றும் ஆலோசகராக அறிவித்துள்ளது. அவர் துபாயில் தங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த உள்ளார். இது அந்த அணி மீதான எதிர்பார்ப்பை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் நிலை

ராஜஸ்தான் ராயல்ஸ் நிலை

2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துபாயில் முகாமிட்டுள்ளது. இந்த ஆண்டு அந்த அணி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்க உள்ளது. இந்த ஆண்டு எப்படியும் பிளே-ஆஃப் வரையாவது செல்ல வேண்டும் என்ற முடிவில் உள்ளது அந்த அணி.

ஆலோசகர்

ஆலோசகர்

அதற்கான திட்டமிடலில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த முன்னாள் கேப்டன் ஷேன் வார்னேவை அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது. 2008 ஐபிஎல் தொடரில் வார்னே தலைமையில் தான் அந்த அணி தன் ஒரே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

விளம்பர தூதர்

விளம்பர தூதர்

2008 முதல் 2011 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய ஷேன் வார்னே, அதன் பின் அணியின் ஆலோசகராக சில ஆண்டுகள் இருந்தார். 2019 ஆம் ஆண்டு அவரை விளம்பர தூதராக மட்டுமே நியமித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

கேப்டன் மாற்றம்

கேப்டன் மாற்றம்

எனினும், அந்த சீசனில் அவர் அணியின் செயல்பாடுகளில் தலையிடவில்லை என கூறப்பட்டது. 2019 சீசனின் இடையே கேப்டனாக இருந்த அஜின்க்யா ரஹானே நீக்கப்பட்டு, ஸ்டீவ் ஸ்மித் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த குழப்பங்கள் இன்றி அணியை வழிநடத்த வேண்டிய நிலையில் இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

இந்த நிலையில், அந்த அணி ஷேன் வார்னேவுக்கு விளம்பர தூதர் என்ற பதவியுடன், அணியின் ஆலோசகர் என்ற பொறுப்பையும் வழங்கி உள்ளது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு வார்னேவுடன் விக்டோரியா அணியில் ஆடியவர் எனபது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே - தோனி

சிஎஸ்கே - தோனி

சிஎஸ்கே அணியின் வீரர்களை வைத்து அந்த அணியை எடை போட்டால் மற்ற ஐபிஎல் அணிகளை விட பின்தங்கிய நிலையில் தான் அந்த அணி உள்ளது. ஆனால், தோனியின் கேப்டன்சி அந்த அணியை போட்டிகளில் பல மடங்கு முன்னிலை வகிக்க வைக்கிறது.

அனுபவம்

அனுபவம்

அதே போன்ற திட்டத்தில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷேன் வார்னேவின் அனுபவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. வார்னே அந்த அணியில் சிறிய அளவில் பங்கு வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த ஆண்டு கோப்பை வெல்லுமா?

Story first published: Monday, September 14, 2020, 13:48 [IST]
Other articles published on Sep 14, 2020
English summary
IPL 2020 : Shane Warne appointed as Team mentor of Rajasthan Royals. Since RR failed to reach Play-off last year, they decided to boost the team with Shane Warne’s experience.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X