For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திறமை இருக்கு.. உங்களுக்குத்தான் இழப்பு.. சிஎஸ்கே மேட்சுக்கு முன் அதிரடியாக வாய்ஸ் கொடுத்த வாட்சன்!

துபாய்; இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடக்க உள்ள நிலையில், வாட்சன் கொடுத்த முக்கியமான பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. சார்ஜா மைதானத்தில் போட்டி நடக்க உள்ளதால், வீரர்கள் அதிக ரன் குவிக்க வாய்ப்புள்ளது.

முன்னதாக மும்பைக்கும் சென்னைக்கும் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அதிரடியாக ஆடி வெற்றிபெற்றது. முதலில் ஆடிய மும்பை 162 ரன்கள் எடுத்த நிலையில், சென்னை அதிரடியாக 165 ரன்கள் எடுத்து வென்றது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பார்த்தால், அது அம்பதி ராயுடு மற்றும் டு பிளசிஸ் ஆகியோர். இதில் அம்பதி ராயுடு 71 ரன்கள் எடுத்தார். டு பிளசிஸ் 58 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை எளிதாக இந்த போட்டியில் வென்றது.

செம எப்படி

செம எப்படி

இந்த போட்டிக்கு பிறகு அம்பதி ராயுடுவிற்கு வரிசையாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ப்பா என்ன ஆட்டம், எல்லா வருடமும் ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருக்கிறார். சென்னைக்கு கிடைத்த பெஸ்ட் பிளேயர் இவர் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். பவுலிங் பிட்சில் இவர் மாஸ் காட்டியது ஆச்சர்யம் அளிக்கிறது என்று பலரும் டிவிட் செய்து வருகிறார்கள்.

 வாட்சன் எப்படி

வாட்சன் எப்படி

இந்த நிலையில் அம்பதி ராயுடுவை சென்னை வீரர் வாட்சன் பாராட்டி உள்ளார். அதில், அம்பதி மிகவும் திறமையான வீரர். அவர் தனது வாழ்நாள் பார்மில் இருக்கிறார். இந்திய அணியில் அவர் விளையாடினால் சிறப்பாக இருக்கும். இந்திய அணியில் அவரை எடுக்க வேண்டும்.

திறமை இருக்கு

திறமை இருக்கு

அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. இந்திய அணியில் அவர் உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்று இருக்க வேண்டும். அவரின் திறமையை தேர்வு கமிட்டி பார்க்கவில்லை. அவரை உலகக் கோப்பை தொடரில் தேர்வு செய்யாதது, இந்திய அணிக்குத்தான் இழப்பு. எல்லா மைதானத்திலும் ஆடும் திறமை கொண்டவர் ராயுடு என்று வாட்சன் தெரிவித்துள்ளார்.

போட்டிக்கு முதல் நாள்

போட்டிக்கு முதல் நாள்

சரியாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிக்கு இடையில் இன்று போட்டி நடக்க உள்ள நிலையில் நேற்று வாட்சன் இப்படி தெரிவித்து உள்ளார். இதனால் இன்றைய போட்டியில் அம்பதி ராயுடு மீது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இன்றும் அவர் சிறப்பாக விளையாடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராயுடு எப்படி

ராயுடு எப்படி

முன்னதாக இந்திய அணியில் அம்பதி ராயுடு உலகக் கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படாதது விமர்சனம் ஆனது. மும்பை சென்னை போட்டிக்கு பின் பலரும் ராயுடுவிற்கு ஆதரவாக பேசினார்கள். அதேபோல் நேற்று ஹர்பஜன் சிங்கும் ராயுடுவிற்கு ஆதரவாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 22, 2020, 17:40 [IST]
Other articles published on Sep 22, 2020
English summary
IPL 2020: Shane Watson also voices for Ambatir Rayudu after Harbhajan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X