For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அணியோட உண்மையான தலைவர் அவர்தான்... அவரை நெனைச்சா பெருமையா இருக்கு... ஸ்டோய்னிஸ்

அபுதாபி: டெல்லி கேபிடல்ஸ் அணியின் உண்மையான தலைவர் ஷிகர் தவான் தான் என்றும் அவரை நினைத்தாலே பெருமையாக இருப்பதாகவும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் 50 பந்துகளில் 78 ரன்களை அடித்து அணியை முதல்முறையாக இறதிப்போட்டிக்கு தகுதி பெற செய்துள்ளார் தவான்.

ரோஹித் சர்மாவை வீட்டுக்கு அனுப்ப முடிவு.. அதிர வைக்கும் பிசிசிஐ திட்டம்.. வெளியான ரகசியம்!ரோஹித் சர்மாவை வீட்டுக்கு அனுப்ப முடிவு.. அதிர வைக்கும் பிசிசிஐ திட்டம்.. வெளியான ரகசியம்!

டெல்லி அணி வெற்றி

டெல்லி அணி வெற்றி

நேற்றைய சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்த போட்டியில் 50 ரன்களில் 78 ரன்களை அடித்த துவக்க வீரர் ஷிகர் தவான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

38 ரன்கள் குவிப்பு

38 ரன்கள் குவிப்பு

இந்தப் போட்டியில் முதல்முறையாக துவக்க வீரராக களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிசும் 38 ரன்களை அடித்து தன்னை நிரூபித்துள்ளார். இவர் பிக் பாஷ் லீக் போட்டிகளில் துவக்க வீரராக விளையாடியுள்ளார். ஆனால் ஐபிஎல்லில் முதல் முறையாக துவக்க வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.

ஷிகர் தவான் குறித்து மகிழ்ச்சி

ஷிகர் தவான் குறித்து மகிழ்ச்சி

இந்நிலையில் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டோய்னிஸ், அணியின் உண்மையான தலைவர் என்றால் அது ஷிகர் தவான் தான் என்று குறிப்பிட்டுள்ளார். அணிக்கு அதிகமான எனர்ஜி மற்றும் அனுபவத்தை அவர் அளித்து வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவரை நினைத்து பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஸ்டோய்னிஸ்.

சூழ்நிலைக்கேற்ப ஆட்டம்

சூழ்நிலைக்கேற்ப ஆட்டம்

இந்த சீசனில் 600 ரன்களை கடந்துள்ள தவானின் சாதனையை சுட்டிக் காட்டியுள்ள ஸ்டோயின்ஸ், இறுதிப்போட்டியில் அவருக்கான மேலும் ஒரு சாதனை காத்துள்ளதாகவும் கூறியுள்ளார். சூழ்நிலைகளுக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொண்டு விளையாடுவது தவானின் சிறப்பான திறமை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அணியில் மாற்றம் இருக்காது

அணியில் மாற்றம் இருக்காது

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தற்போதைய அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்றும் திட்டத்திலும் மாற்றம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வலமையான அணி என்றும் தாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Story first published: Monday, November 9, 2020, 16:37 [IST]
Other articles published on Nov 9, 2020
English summary
We will just bring out our best game of cricket and play our best -Stoinis
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X