For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்ட திட்டமெல்லாம் வேஸ்ட்.. வார்னரின் ஸ்பின் அட்டாக்கை உடைத்த சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியின் சுழற் பந்துவீச்சு திட்டத்தை தவிடு பொடியாக்கியது.

அம்பதி ராயுடு - ஷேன் வாட்சன் இருவரை வைத்து ஹைதராபாத் அணியின் சிறந்த சுழற் பந்துவீச்சை காலி செய்தார் தோனி.

சரியான திட்டமிடல் காரணமாக, ஹைதராபாத் அணியின் பலத்தை உடைத்தார் தோனி.

சிஎஸ்கே டாஸ் வென்றது

சிஎஸ்கே டாஸ் வென்றது

சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். முதன் முறையாக இந்த சீசனில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்ததால் தோனி என்ன திட்டம் வைத்துள்ளார்? என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஹைதராபாத் அணியின் பலம்

ஹைதராபாத் அணியின் பலம்

குறிப்பாக, ஹைதராபாத் அணியை வீழ்த்த தோனி என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வியுடன் காத்திருந்தனர். ஹைதராபாத் அணியின் பலம் சுழற் பந்துவீச்சு தான். ரஷித் கான் ஓவர்களை எந்த அணியலும் அடித்து ஆட முடியவில்லை. இந்த நிலையில், அதை காலி செய்ய திட்டமிட்டார் தோனி.

தோனி செய்த மாற்றம்

தோனி செய்த மாற்றம்

தோனி அதிரடியாக சாம் கர்ரனை துவக்க வீரராக இறக்கினார். சாம் கர்ரன் அதிரடி ஆட்டம் ஆடி 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். சாம் கர்ரன் துவக்கத்தில் அதிரடி ஆட்டம் ஆடினால் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் உயரும் என்பதாலேயே தோனி இந்த முடிவை எடுத்ததாக கருதப்பட்டாலும், வாட்சன் - ராயுடு தான் உண்மையான திட்டத்தை அமல்படுத்தினர்.

வாட்சன் - ராயுடு ஆடிய ஆட்டம்

வாட்சன் - ராயுடு ஆடிய ஆட்டம்

ஷேன் வாட்சன் - அம்பதி ராயுடு இரண்டு விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டம் ஆடினர். ஆனால், அவர்கள் இருவரும் ரஷித் கான் - ஷாபாஸ் நதீம் என இரண்டு ஹைதராபாத் சுழற் பந்துவீச்சாளர்களின் 8 ஓவர்களையும் சந்தித்தனர்.

ரஷித் கான்

ரஷித் கான்

விக்கெட் இழக்காமல், ஓவருக்கு 7 ரன்கள் என்ற ரன் ரேட்டை மனதில் வைத்து அவர்கள் ஆடினர். சுழற் பந்துவீச்சாளர்களை மட்டும் குறி வைத்து அடித்து ஆடினர். ரஷித் கான் ஓவரில் சிக்ஸ் அடிக்க முடியாது என பலரும் கூறி வந்த நிலையில் அவர் ஓவர்களில் மட்டும் மூன்று சிக்ஸ் அடித்தார் வாட்சன்.

விக்கெட் எடுக்கவில்லை

விக்கெட் எடுக்கவில்லை

ரஷித் கான் 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்திருந்தார். ஷாபாஸ் நதீம் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்திருந்தார். இருவருமே ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை, இது தான் சிஎஸ்கே அணியின் உச்சகட்ட திட்டம். இதை வார்னர் எதிர்பார்க்கவில்லை.

வார்னர் திட்டம் காலி

வார்னர் திட்டம் காலி

டேவிட் வார்னர் மத்திய ஓவர்களில் சுழற் பந்துவீச்சை வைத்து ரன் குவிப்பை தடுக்கலாம் என கணக்கு போட்டார். அதை தோனி தன் திட்டத்தால் முறியடித்தார். அடுத்து கடைசி ஓவர்களில் வேகப் பந்துவீச்சை வெளுத்து ஆடியது தோனி, ஜடேஜா ஜோடி.

சிஎஸ்கே ஸ்கோர்

சிஎஸ்கே ஸ்கோர்

சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. சாம் கர்ரன் 31, வாட்சன் 42, ராயுடு 41, தோனி 21, ஜடேஜா 25 ரன்கள் குவித்தனர். அடுத்து ஆடிய ஹைதராபாத் அணி பந்துவீச்சைப் போலவே பேட்டிங்கிலும் தட்டுத் தடுமாறி ஆடியது.

Story first published: Tuesday, October 13, 2020, 23:16 [IST]
Other articles published on Oct 13, 2020
English summary
IPL News : SRH vs CSK - This is how CSK tackled SRH spin attack from Rashid Khan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X