219 ரன்.. வார்னருடன் சேர்ந்து தெறிக்கவிட்ட அந்த இந்திய வீரர்.. டெல்லியை அசால்ட் செய்த சன்ரைசர்ஸ்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி துபாயில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஹைதராபாத் அணி அணியில் 3 வீரர்களை மாற்றி இருந்தது. அதில் ஒருவரான சாஹா, வார்னருடன் இணைந்து அதிரடியில் தெறிக்கவிட்டார்.

3 பேரை நீக்கிய வார்னர்.. பேர்ஸ்டோவும் நீக்கம்.. சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி மாற்றம்!

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யவே, ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் வில்லியம்சன், விரிதிமான் சாஹா, நதீம் அணியில் இடம் பெற்றனர். சாஹா துவக்க வீரராக களமிறங்கினார்.

வார்னர் அதிரடி

வார்னர் அதிரடி

டேவிட் வார்னர், சாஹா இருவரும் துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடினர். டெல்லி அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் ரபாடா, அஸ்வின், அன்ரிச் நோர்ஜே பந்துவீச்சை குறி வைத்து தாக்கினார் வார்னர். அவர் 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

சாஹா 87

சாஹா 87

விரிதிமான் சாஹா மறுபுறம் வார்னருக்கு இணையாக அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். 12 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார். வார்னர் 8 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார்.

சன்ரைசர்ஸ் ஸ்கோர்

சன்ரைசர்ஸ் ஸ்கோர்

இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின் மனிஷ் பாண்டே தன் பங்குக்கு அதிரடி ஆட்டம் ஆடி 31 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். வில்லியம்சன் 11 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

டெல்லி தடுமாற்றம்

டெல்லி தடுமாற்றம்

டெல்லி அணி பந்துவீச்சில் எதிர்பாராத வகையில் தடுமாறியது. அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் அனைவரும் ரன்களை வாரி இறைத்தனர். ரபாடா அதிகபட்சமாக 4 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்தார். அஸ்வின் மற்றும் துஷார்பாண்டே இருவரும் தலா 3 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து இருந்தனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020 SRH vs DC : SRH scored 219 runs against DC
Story first published: Tuesday, October 27, 2020, 22:12 [IST]
Other articles published on Oct 27, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X