For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டை ஆன மேட்ச்.. பரபர சூப்பர் ஓவர்.. சொதப்பிய ஹைதராபாத்.. கொல்கத்தா அபார வெற்றி!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் 35வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி சூப்பர் ஓவர் வரை சென்று ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 163 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் அணி போராடி 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது.

அடுத்து நடந்த சூப்பர் ஓவரில் ஹைதராபாத் மோசமாக சொதப்பியது. இதை அடுத்து கொல்கத்தா சூப்பர் ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது.

அந்த வீரரை நம்பி ஏமாந்த மார்கன்.. தினேஷ் கார்த்திக் வைத்த ட்விஸ்ட்.. தரமான சம்பவம்!அந்த வீரரை நம்பி ஏமாந்த மார்கன்.. தினேஷ் கார்த்திக் வைத்த ட்விஸ்ட்.. தரமான சம்பவம்!

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. ராகுல் திரிபாதி 23 ரன்கள் குவித்தார். ஷுப்மன் கில் நிதான ஆட்டம் ஆடி 36 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா ரன் குவிப்பு

கொல்கத்தா ரன் குவிப்பு

நிதிஷ் ராணா 29, ரஸ்ஸல் 9, மார்கன் 34 ரன்கள் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம் ஆடி 14 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத் ஆட்டம்

ஹைதராபாத் ஆட்டம்

அடுத்து ஆடிய ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சன் - பேர்ஸ்டோவை துவக்க வீரர்களாக ஆட வைத்தது. வில்லியம்சன் 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். பேர்ஸ்டோ 36, ப்ரியம் கார்க் 4, மனிஷ் பாண்டே 6, விஜய் ஷங்கர் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

டேவிட் வார்னர் 33 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்துல் சமத் அதிரடி ஆட்டம் ஆடி 23 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணி சரியாக 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது.

போட்டி டை

போட்டி டை

20வது ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி 17 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டி டை ஆன நிலையில், ஹைதராபாத் அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்தது. வார்னர் - பேர்ஸ்டோ களமிறங்கினர்.

வார்னர் டக் அவுட்

வார்னர் டக் அவுட்

லாக்கி பெர்குசன் வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்தில் வார்னர் டக் அவுட் ஆனார். அடுத்து அப்துல் சமத் களமிறங்கி 2ரன்கள் எடுத்து மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா வெற்றி

கொல்கத்தா வெற்றி

அடுத்து ஆடிய கொல்கத்தா அணி ரஷித் கான் வீசிய சூப்பர் ஓவரில் 4வது பந்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது. ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் போராடி போட்டியை டை செய்தாலும், சூப்பர் ஓவரில் சொதப்பி தோல்வி அடைந்தது.

Story first published: Sunday, October 18, 2020, 20:38 [IST]
Other articles published on Oct 18, 2020
English summary
IPL 2020 SRH vs KKR : KKR won the match in super over
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X