அதிரடி ஆட்டம் போட்ட டிவில்லியர்ஸ்.. ஹைதராபாத் போராட்டம் வீண்.. முதல் போட்டியிலேயே வென்ற பெங்களூர்!

துபாய் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

2020 ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி துபாயில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 163 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல்ல அஸ்வின்.. இப்ப இவர்.. சறுக்கி விழும் வீரர்கள்.. துபாய் மைதானத்தில் என்ன நடக்கிறது? பரபரப்பு

வார்னர்

வார்னர்

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர் தலைமையில் மீண்டும் களமிறங்கியது. பெங்களூர் அணி கடந்த இரண்டு சீசன்களில் படுமோசமாக தோற்று வந்த நிலையில், அதை இந்த சீசனில் மாற்றுமா? என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.

டாஸ்

டாஸ்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூர் அணிக்கு தேவ்தத் படிக்கல் - ஆரோன் பின்ச் துவக்கம் அளித்தனர். பின்ச் அதிரடி ஆட்டம் ஆடுவார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

தேவ்தத் அதிரடி

தேவ்தத் அதிரடி

இளம் வீரர் தேவ்தத் படிக்கல் தன் அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே அதிரடி ஆட்டம் ஆடி திகைக்க வைத்தார். ஆரோன் பின்ச் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து நிதான ஆட்டம் ஆடினார். தேவ்தத் படிக்கல் 42 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கோலி ஏமாற்றம்

கோலி ஏமாற்றம்

அடுத்த பந்திலேயே பின்ச் 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கோலி 13 பந்துகளில் ஒவ்வொரு ரன்னாக ஓடி 14 ரன்கள் எடுத்து தன் முதல் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டிவில்லியர்ஸ் சரவெடி

டிவில்லியர்ஸ் சரவெடி

பெங்களூர் அணி ரன் குவிப்பை அதன் பின் ஏபி டிவில்லியர்ஸ் கவனித்துக் கொண்டார். அவர் 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். 4 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து மிரட்டினார். 20வது ஓவரில் அவர் ரன் அவுட் ஆனார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத் பந்துவீச்சு

ஹைதராபாத் பந்துவீச்சு

ஹைதராபாத் அணி பந்துவீச்சில் திணறியது. புவனேஸ்வர் குமார் மட்டுமே 7 ரன்களுக்கு குறைவாக கொடுத்தார். ஏழு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். மிட்செல் மார்ஷ் 4 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்து வெளியேறினார்.

பெங்களூர் அணி ஸ்கோர்

பெங்களூர் அணி ஸ்கோர்

பெங்களூர் அணி 163 ரன்கள் எடுத்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பலம் குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் பேட்டிங்

ஹைதராபாத் பேட்டிங்

சேஸிங் செய்யத் துவங்கிய ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் துரதிர்ஷ்டவசமாக பேர்ஸ்டோ அடித்த பந்து மறுமுனை ஸ்டம்பில் பட்டு ரன் அவுட் ஆனார். அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே - பேர்ஸ்டோ நிலைத்து நின்று ரன் சேர்த்தனர்.

பேர்ஸ்டோ அதிரடி

பேர்ஸ்டோ அதிரடி

மனிஷ் பாண்டே 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ அதிரடி ஆட்டம் ஆடி 61 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அதன் பின் ஹைதராபாத் அணியின் விக்கெட் சரிவு தொடங்கியது. அவர் அவுட் ஆன அடுத்த பந்தில் விஜய் ஷங்கர் டக் அவுட் ஆனார்.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

அபிஷேக் சர்மா 7 ரன்களும், ரஷித் கான் 6 ரன்களும், புவனேஸ்வர் குமார், மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 9 விக்கெட்கள் இழந்த நிலையில் கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது சந்தீப் சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பெங்களூர் வெற்றி

பெங்களூர் வெற்றி

ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனின் முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கி நம்பிக்கை அளித்தது அந்த அணி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 SRH vs RCB : Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore match updates
Story first published: Monday, September 21, 2020, 19:15 [IST]
Other articles published on Sep 21, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X