For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வலை விரித்த இளம் தமிழக வீரர்.. ஏமாந்து போன கோலி.. செம விக்கெட்!

துபாய் : இளம் தமிழக வீரர் நடராஜன் விரித்த வலையில் சிக்கினார் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி.

இந்த சம்பவம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே ஆன ஐபிஎல் போட்டியில் நடந்தது.

இந்தப் போட்டியில் விராட் கோலி ஏமாற்றிய போதும் பெங்களூர் அணி 163 ரன்கள் குவித்தது.

முதல்ல அஸ்வின்.. இப்ப இவர்.. சறுக்கி விழும் வீரர்கள்.. துபாய் மைதானத்தில் என்ன நடக்கிறது? பரபரப்புமுதல்ல அஸ்வின்.. இப்ப இவர்.. சறுக்கி விழும் வீரர்கள்.. துபாய் மைதானத்தில் என்ன நடக்கிறது? பரபரப்பு

மூன்றாவது லீக் போட்டி

மூன்றாவது லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியில் தமிழக வீரர் டி நடராஜன் இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் இடம் பெற்றார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

அவர் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆறு போட்டிகளில் ஆடி இருந்தார். அதன் பின் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட அவர் இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு இன்றி வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார்.

4 ஓவர்கள் வீசிய நடராஜன்

4 ஓவர்கள் வீசிய நடராஜன்

இந்த நிலையில், இந்த சீசனில் ஹைதராபாத் அணியின் முதல் போட்டியிலேயே கேப்டன் டேவிட் வார்னர் அவருக்கு அணியில் இடம் அளித்தார். முதல் போட்டியில் நடராஜன் முழுமையாக 4 ஓவர்கள் பந்து வீசினார்.

கோலிக்கு அழுத்தம்

கோலிக்கு அழுத்தம்

அவரது முதல் ஓவரில் 12 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தாலும் அதன் பின் போட்டியில் தன் திறனை வெளிப்படுத்தினார். போட்டியின் 16வது ஓவரில் கோலி 14 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டிங் செய்து வந்தார். அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் இருந்ததால் பவுண்டரி அடிக்க அழுத்தம் ஏற்பட்டது.

ஏறி வந்து அடித்த கோலி

ஏறி வந்து அடித்த கோலி

இந்த நிலையில், நடராஜன் தான் வீசிய 16வது ஓவரின் 5 வது பந்தை கோலியை அடிக்கத் தூண்டும் வகையில் ஆஃப் சைடில் வீசினார். வேகத்தை குறைத்து, மிடில் ஸ்டம்பில் இருந்து ஆஃப் சைடு போகும் படி அவர் வீசிய பந்தை ஏறி வந்து அடித்தார் கோலி.

கேட்ச்

கேட்ச்

கோலி அடித்த பந்து பவுண்டரி எல்லையில் இருந்த ரஷித் கான் கைகளில் தஞ்சம் அடைந்தது. நடராஜன் திட்டமிட்டு பந்து வீசி கோலியை தன் வலையில் வீழ்த்தினார். கோலி இந்தப் போட்டியில் பவுண்டரி அடிக்க செய்த முதல் முயற்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடராஜன் பந்துவீச்சு

நடராஜன் பந்துவீச்சு

நடராஜன் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். 1 விக்கெட் தான் என்றாலும் அது விராட் கோலியின் விக்கெட் என்பதால் அவர் மீது அனைவரின் கவனமும் சென்றது. அடுத்த போட்டிகளிலும் அவருக்கு ஹைதராபாத் அணியில் வாய்ப்பு கிடைக்கக் கூடும்.

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் அணியில் விராட் கோலி ஏமாற்றம் அளித்தாலும் தேவ்தத் படிக்கல் 56, ஏபி டிவில்லியர்ஸ் 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணிக்கு 164 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Story first published: Monday, September 21, 2020, 23:05 [IST]
Other articles published on Sep 21, 2020
English summary
IPL 2020 News in Tamil : SRH vs RCB - T Natarajan picks Kohli wicket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X