நீங்கதான் பிரச்சனை.. வெளியேறுங்கள்.. தோனியை தொடர்ந்து அடுத்த வீரருக்கும் குறி வைத்த கம்பீர்.. பரபர

துபாய்: ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமில்லாமல் அணியில் இருந்தும் ஸ்டீவ் ஸ்மித் விலக வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் அணி மோசமாக சொதப்பி வருகிறது. சிஎஸ்கே அணி தொடக்கத்தில் மோசமாக ஆடிய போது அதை கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

அணியின் பேட்டிங் சரியில்லை, கேப்டன் தோனி சரியாக ஆடவில்லை என்று கம்பீர் விமர்சனம் செய்து இருந்தார். தோனிக்கு எதிராக கம்பீர் கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் கம்பீர் தனது போகஸை அப்படியே ராஜஸ்தான் அணியின் பக்கம் திருப்பி இருக்கிறார். ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமில்லாமல் அணியில் இருந்து ஸடீவ் ஸ்மித் விலக வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஸ்மித்

ஸ்மித்

கம்பீர் தனது பேச்சில், ராஜஸ்தான் அணியின் ஒரே பிரச்சனை ஸ்மித்தான். அவர் அணியில் எதுவும் செய்யவில்லை. இதனால் அவர் அணியில் இருந்து வெளியேற வேண்டும். இதற்கு பதிலாக வேறு வெளிநாட்டு வீரர் உள்ளே வர வேண்டும்.வெளிநாட்டு பவுலர் அணிக்குள் வர வேண்டும். முதல் நாளில் இருந்தே இதைதான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

பவுலிங் ஆர்டர்

பவுலிங் ஆர்டர்

ஸ்மித் வெளியேறினால் அணியின் பவுலிங் ஆர்டர் இன்னும் வலிமையாகும். தாமஸ் போன்ற வெளிநாட்டு பவுலர்களை அணிக்குள் கொண்டு வரலாம். இன்னொரு பவுலர் உள்ளே வந்தால் ஜோப்ரா ஆர்ச்சர் பவர் பிளேவில் கூடுதலாக ஓவர் வீச முடியும். இது ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

ஆர்ச்சர் ஓவர்

ஆர்ச்சர் ஓவர்

பல போட்டிகளில் தொடக்கத்தில் ஆர்ச்சருக்கு ஓவர் கொடுக்க முடியாமல் ராஜஸ்தான் அணி திணறியது. அது மாற வேண்டும் என்றால் ஸ்மித் வெளியேற வேண்டும். ராஜஸ்தான் அணியில் கேப்டன்சி செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஸ்மித்தான் தற்போது இருக்கும் பார்மிற்கு வெளியேற வேண்டும், என்று கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பீர் கோரிக்கை

கம்பீர் கோரிக்கை

கடந்த 12 போட்டிகளில் ஸ்மித் மொத்தமாக 276 ரன்கள் மட்டுமே அடித்து உள்ளார். சராசரியாக 25 ரன்கள் மட்டுமே ஸ்மித் ஒவ்வொரு போட்டியிலும் எடுத்துள்ளார். இவரின் ஸ்டிரைக் ரேட்டும் 129.57தான். இதனால்தான் ஸ்மித்தை வெளியேறும்படி கம்பீர் கூறுகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Steve Smith should replace himself with another foreign player in RR says Gambhir
Story first published: Monday, October 26, 2020, 15:25 [IST]
Other articles published on Oct 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X