எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு

சென்னை : ஐபிஎல் போட்டிகளுக்காக வரும் 21ம் தேதி யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்.

IPL 2020: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள்

முன்னதாக சென்னை சிதம்பரம் மைதானத்தில் வரும் 15ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு அணியின் முக்கிய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். இதற்கு தமிழக அரசும் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

இதையொட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி, முரளி விஜய் ஆகிய வீரர்களுடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ள சுரேஷ் ரெய்னா, மைதானத்தில் விளையாடுவதற்காக ஒவ்வொரு நாளையும் தான் எண்ணிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அரசு அனுமதி.. பிசிசிஐ அறிவிப்பு!

53 நாட்கள் நடைபெறும் போட்டிகள்

53 நாட்கள் நடைபெறும் போட்டிகள்

வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரையில் யூஏஇயில் 53 நாட்கள் ஐபிஎல் 2020 தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் 8 அணிகளும் வரும் 20ம் தேதியையொட்டி யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளன. இந்நிலையில் வரும் 21ம் தேதி தங்களது பயணத்தை சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.

சிதம்பரம் மைதானத்தில் பயிற்சி

சிதம்பரம் மைதானத்தில் பயிற்சி

முன்னதாக வரும் 15ம் தேதி முதல் ஒருவாரம் சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தங்களது பயிற்சி ஆட்டங்களை அந்த அணியின் கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மேற்கொள்ளவுள்ளனர். இதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னா பதிவு

சுரேஷ் ரெய்னா பதிவு

இந்நிலையில் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, முரளி விஜய் மற்றும் அணியின் மேனேஜர் ரசல் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தான் இருக்கும் புகைப்படத்தை இணைத்து மைதானத்திற்கு செல்லும் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

காத்திருக்க முடியவில்லை

காத்திருக்க முடியவில்லை

மேலும் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவும் ஐபிஎல் போட்டிகளுக்காக காத்திருக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் இதுவரை 193 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா, 5,368 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 33.34 மற்றும் ஸ்டிரைக் ரேட் 137.14ஆக உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Counting days to get on the field and cherish every minute
Story first published: Monday, August 10, 2020, 19:45 [IST]
Other articles published on Aug 10, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X