For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டீமை விட்டு தூக்கும் அளவுக்கு எந்த தப்பும் செய்யவில்லை.. காத்திருக்கும் சிஎஸ்கே வீரர்.. கசிந்த தகவல்

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2020 ஐபிஎல் சீசன் படுமோசமாக முடிய உள்ளது.

புள்ளிப் பட்டியலில் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பையும் இழந்துள்ளது.

இனி அடுத்த சீசன் குறித்து சிஎஸ்கே அணி சிந்திக்கத் துவங்கி விட்டது. இந்த நிலையில், இந்த சீசனில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணிக்குள் சேர்க்கக் கூடும்.

எதிர் நீச்சலடி.. கஷ்டப்பட்டேன்.. கையில் காசே இல்லை.. போட்டிக்கு பின் உடைந்து நொறுங்கிய சென்னை வீரர்!எதிர் நீச்சலடி.. கஷ்டப்பட்டேன்.. கையில் காசே இல்லை.. போட்டிக்கு பின் உடைந்து நொறுங்கிய சென்னை வீரர்!

சிஎஸ்கே நிலை

சிஎஸ்கே நிலை

2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பையும் இழந்துள்ளது. சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா இல்லாததே பேட்டிங் பலவீனமடைய முக்கிய காரணம் என ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை கூறி உள்ளனர்.

ரெய்னா விலகல்

ரெய்னா விலகல்

2020 ஐபிஎல் தொடருக்கு முன் அன்யோ நிர்வாகத்துடனும், தோனி உடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரெய்னா விலகியதாக அப்போது கூறப்பட்டது. அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தான் முதலில் கூறியது.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

சுரேஷ் ரெய்னா விலகியதாக எதுவும் கூறாத நிலையில், அவர் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால், அவருக்கு கடைசி வரை அழைப்பு வரவில்லை. தோனி தான் அவரை சேர்ப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் கூறியது. தோனி அவரை அணியில் சேர்க்கவில்லை.

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

சிஎஸ்கே அணியின் முதல் போட்டிக்கு முன்னதாக ட்வீட் வெளியிட்ட ரெய்னா தான் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை. ஆனாலும், சிஎஸ்கே அணி வெற்றி பெற வாழ்த்துவதாக அவர் கூறி இருந்தார்.

தொடர்ந்து ஆதரவு

தொடர்ந்து ஆதரவு

அதன் பின், சுரேஷ் ரெய்னா அவ்வப்போது சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக பதிவுகளை பகிர்ந்து வந்தார். மும்பை போட்டியில் சிஎஸ்கே அணி விக்கெட்களை இழந்து தவித்த போது சாம் கர்ரன் அரைசதம் அடித்து அணியை 100 ரன்களுக்கு மேல் எடுக்கச் செய்தார். அப்போது சாம் கர்ரனை பாராட்டி பதிவிட்டார் ரெய்னா.

ஹர்பஜன் சிங் என்ன செய்தார்?

ஹர்பஜன் சிங் என்ன செய்தார்?

ரெய்னாவுடன் 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்காத மற்றொரு வீரரான ஹர்பஜன் சிங் சில முறை தோனி மற்றும் சிஎஸ்கே தோல்வி அடைந்த போது கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தார். தாமாக விலகிய வீரரே அணியை கிண்டல் செய்த போதும், வெளியேற்றப்பட்ட ரெய்னா தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

மீண்டும் வர விருப்பமா?

மீண்டும் வர விருப்பமா?

சுரேஷ் ரெய்னா நிச்சயம் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்கே மீண்டும் திரும்ப விரும்புகிறார் என்பதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் அணியை மாற்றி அமைக்க உள்ளது. அப்போது சுரேஷ் ரெய்னா அணியில் மீண்டும் வாய்ப்பு பெறக் கூடும்.

அனுபவ வீரர்

அனுபவ வீரர்

சுரேஷ் ரெய்னா சாதாரண டி20 வீரர் அல்ல. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர். அதிக சிக்ஸ், அதிக அரைசதம் என பல்வேறு சாதனைப் பட்டியல்களில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. அவரது ஐபிஎல் அனுபவம் நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான ஒன்றாகும்.

தோனி இருப்பார்

தோனி இருப்பார்

2021 ஐபிஎல் தொடரில் நிச்சயம் தோனி பங்கேற்க உள்ளார். அவர் வீரராக சிஎஸ்கே அணியில் இடம் பெறுவாரா? அல்லது ஆலோசகராக இடம் பெறுவாரா? என்பது மட்டுமே கேள்விக் குறியாக உள்ளது. தோனி ரெய்னாவை அணியில் சேர்க்க சம்மதம் தெரிவிப்பாரா?

Story first published: Monday, October 26, 2020, 18:03 [IST]
Other articles published on Oct 26, 2020
English summary
IPL 2020 : Suresh Raina may return to CSK next season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X