For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உன் பேரு லிஸ்டில் இல்லப்பா.. 3 வருடமாக சிறப்பாக ஆடியும் புறக்கணிக்கப்பட்ட அந்த வீரர்.. என்ன நடந்தது?

துபாய்: இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மூத்த வீரர் சூர்ய குமார் யாதவ் இந்த முறையும் அணியில் இடம்பிடிக்கவில்லை.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியல் நேற்று வெளியானது.

ஐபிஎல் சீசனில் நன்றாக விளையாடி திறமையை நிரூபித்த சைனி, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி போன்ற வீரர்கள் இந்த முறை அணியில் இடம் பிடித்து உள்ளனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் கடந்த மூன்று வருடமாக சிறப்பாக ஆடியும் சூர்ய குமார் யாதவ் இந்த முறை அணியில் தேர்வாகவில்லை. 3 வருடமாக சூர்யா குமார் மும்பை அணிக்காக மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கி வருகிறார். ஒவ்வொரு முறை மும்பை அணி சறுக்கும் போதும் இவர்தான் அணியின் வெற்றிக்கு உதவி உள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

ஆனால் இவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.எவ்வளவு சிறப்பாக ஆடியும் கூட இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் சீசனுக்கு பின் சூர்ய குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மறுப்பு

மறுப்பு

இந்திய அணியில் சூர்யா குமார் யாதவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் இவர் கொடுத்த இந்த பேட்டி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் , ஒவ்வொரு முறை கிரிக்கெட் தொடர் நடக்கும் போதும் அதற்கு சில நாட்களுக்கு முன் அணி தேர்வும் நடக்கும்.

தேர்வு

தேர்வு

இந்திய அணி எப்போது தேர்வு செய்யப்பட்டாலும் என்னுடைய அப்பா இணையத்தில் சென்று அந்த செய்தியை படிப்பார். இந்திய அணியில் என்னுடைய பெயர் இருக்கிறதா என்று பார்ப்பார். ஆனால் ஒருமுறை கூட என்னுடைய பெயர் இந்திய அணி வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்தது இல்லை. எப்போதும் என்னுடைய பெயர் அந்த லிஸ்டில் இருந்தது இல்லை.

தம்பி உன் பேர்

தம்பி உன் பேர்

ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் அடையும் என்னுடைய அப்பா.. தம்பி உன் பேர் லிஸ்டில் இல்லப்பா என்று கூறுவார். அவர் துக்கத்துடன் அதிர்ச்சியாக இப்படி கூறுவார். ஆனால் நான் என்னுடைய அப்பாவிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது கிடையாது.

ஆறுதல்

ஆறுதல்

என்னுடைய அப்பாவிடம் அது பிரச்சனை இல்லப்பா விடுங்க என்று கூறுவேன். அவருக்கு ஆறுதலாக பேசுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார் சூர்ய குமார் யாதவ். இந்த நிலையில் இந்திய அணியில் இணைய வேண்டும் என்று ஏக்கமாக இருந்த சூர்ய குமார் இந்த முறை மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளார். நன்றாக ஆடியும் அவருக்கும் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் நன்றாகவே ஆடி வருகிறார். டொமஸ்டிக் ஆட்டங்களில் இவர் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். பல முறை தன்னுடைய திறமையை இவர் நிரூபித்து விட்டார். ஆனாலும் இவரை தொடர்ந்து தேர்வுக்குழு புறக்கணித்து வருகிறது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இவரை ஏன் இந்திய அணியில் எடுக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், ஹர்பஜன் சிங் போன்றவர்கள் பிசிசிஐக்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளனர். விஜய் சங்கர் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது இவருக்கு ஏன் வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Tuesday, October 27, 2020, 13:41 [IST]
Other articles published on Oct 27, 2020
English summary
IPL 2020: Surya Kumar Yadav not selected in Team India again, What happened?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X