For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித்தான் ஆட சொன்னார்.. கோலியை சீண்டிய கையோடு சூர்ய குமார் மாஸ் பேச்சு.. என்ன இப்படி சொல்லிட்டாரு!

துபாய்: நேற்று பெங்களூர் அணியை மைதானத்தில் துவைத்து எடுத்து மும்பைக்கு வெற்றித் தேடித்தந்த சூர்ய குமார் யாதவ் இணையம் முழுக்க வைரலாகி உள்ளார். போட்டிக்கு பின்பாக இவர் கொடுத்த பேட்டி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை அணியின் வீரர் சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆடி 43 பந்தில் 79 ரன்கள் எடுத்தார். தன்னை இந்திய அணியில் எடுக்காத தேர்வு குழுவிற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று அதிரடி ஆட்டம் ஆடினார்.

அதிலும் நேற்று மைதானத்தில் இவருக்கும் கோலிக்கும் இடையே பல முறை உரசல்கள் ஏற்பட்டது. கோலி இவரை முறைப்பதும், சூர்யா குமார் பதிலுக்கு கோலியை முறைப்பதும் மைதானத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது .

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில் நேற்று போட்டிக்கு பின்பாக சூர்ய குமார் யாதவ் கொடுத்த பேட்டி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது பேட்டியில், நான் போட்டியை முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். என்னுடைய ஆட்டம் எது என்பதை கற்றுக்கொள்ள முயன்றேன். போட்டியை முறையாக முடித்தது சந்தோசம் தருகிறது.

அமைதி

அமைதி

போட்டிக்கு இடையே மெடிடேஷன் செய்தது எனக்கு பெரிய அளவில் உதவியது. சாஹல் ஓவரில் ஓவர் கவர் திசையில் அடித்ததும், ஸ்டெயின் பந்தில் பேக் புட் ஷாட்டும் இந்த போட்டியிலும் எனக்கு மிகவும் பிடித்தமான ஷாட்.

கவனம் செலுத்தினேன்

கவனம் செலுத்தினேன்

லாக்டவுன் நேரத்தில் என்னுடைய ஆட்டம் மீது நான் கவனம் செலுத்தினேன். இதற்கு முன் ஆன் சைட் பகுதியில் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று போட்டியை மொத்தமாக முடித்து கொடுத்தது சந்தோசம் கொடுக்கிறது. மூன்றாவது இடத்தில் இறங்கி ஆடுவது சந்தோசம் அளிக்கிறது.

ரோஹித் சர்மா என்ன சொன்னார்

ரோஹித் சர்மா என்ன சொன்னார்

அணி நிர்வாகமும், ரோஹித் சர்மாவும் என்னிடம் இதை பற்றி ஏற்கனவே பேசி இருக்கிறார்கள். நீ நிறைய போட்டிகளில் ஆடி இருக்கிறாய். உனக்கு அனுபவம் இருக்கிறது. நீ நினைத்தால் இன்னும் ஆழமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும், நீ போய் ஆடு என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

அப்படி ஒரு ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி, என்று சூர்ய குமார் யாதவ் பேட்டி அளித்துள்ளார். யாதவ் தனது பேட்டியில் கோலியை மூன்று இடங்களில் சீண்டி இருக்கிறார். அதன்படி நான் மைதானத்தில் மெடிடேஷன் செய்தேன் என்று கோலியை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். கோலி நேற்று சூர்ய குமார் யாதவை மைதானத்தில் சீண்டியது பெரிய வைரலானது.

பதில் சொல்லவில்லை

பதில் சொல்லவில்லை

ஆனால் சூர்ய குமார் யாதவ் இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். மிகவும் அமைதியாக மைதானத்தில் பொறுப்பாக நடந்து கொண்டார். இதைத்தான் சூர்ய குமார் யாதவ்.. நான் மெடிடேஷன் செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இன்னொரு பக்கம் எனக்கு அணியில் 3வது இடத்தில் களமிறங்குவது பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சொல்லிக்காட்டினார்

சொல்லிக்காட்டினார்

இது இந்திய அணியில் கோலி இறங்கும் இடம் ஆகும். இதெல்லாம் போக.. என்னை இதுபோல் ஆடும்படி ரோஹித் சர்மா கூறினார். எனக்கு அனுபவம் இருப்பதாக ரோஹித் சர்மா கூறினார் என்று சூர்ய குமார் யாதவ் குறிப்பிட்டுள்ளார். தனக்கு இருக்கும் 14 வருட அனுபவத்தையும், ரோஹித் சர்மா கொடுக்கும் ஊக்கத்தையும் சொல்லி காட்டி சூர்ய குமார் யாதவ் கோலியை சீண்டி இருக்கிறார்.

Story first published: Thursday, October 29, 2020, 9:00 [IST]
Other articles published on Oct 29, 2020
English summary
IPL 2020: Surya Kumar Yadav's befitting reply to Kohli after the match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X