For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 வருடம் முன் தோனி எடுத்த முடிவு.. சிஎஸ்கேவின் அந்த தவறு..சென்னையை விடாமல் துரத்தும் பெரிய பிரச்சனை!

2018ல் ஐபிஎல் ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த சின்ன தவறு தற்போது சிஎஸ்கே அணிக்கே எதிராக திரும்பி உள்ளது.

சென்னை: 2018ல் ஐபிஎல் ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த சின்ன தவறு தற்போது சிஎஸ்கே அணிக்கே எதிராக திரும்பி உள்ளது.

கிட்டத்தட்ட 1 வருடம் பெரிய அளவில் கிரிக்கெட் தொடர் எதுவும் நடக்காத நிலையில், இன்று கொரோனா பாதிப்பிற்கு இடையே ஐபிஎல் போட்டிகள் நடக்கிறது. இந்தியாவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டிகள் இந்த முறை கொரோனா காரணமாக அமீரகத்தில் நடக்க உள்ளது.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையில் நடக்கும் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் ஒரு வருட தாகத்தை தீர்க்க போகிறது. 2018 ஐபிஎல்லில் சென்னை கோப்பை வென்றது.. அதற்கு அடுத்த தொடரில் மும்பை கோப்பை வென்றது.

இந்தமுறை வேற மாதிரி இருக்கும்.. தோனி மொத்தமாக மாறிவிட்டார்.. சிஎஸ்கே கோச் உடைத்த செம சீக்ரெட்!இந்தமுறை வேற மாதிரி இருக்கும்.. தோனி மொத்தமாக மாறிவிட்டார்.. சிஎஸ்கே கோச் உடைத்த செம சீக்ரெட்!

கடும் போட்டி

கடும் போட்டி

சென்னையிடம் 3 ஐபிஎல் கோப்பைகள் உள்ளது. மும்பையிடம் 4 கோப்பைகள் உள்ளது. இந்த நிலையில்தான் பரம வைரிகளான சென்னைக்கும் - மும்பைக்கும் இடையில் இந்தமுறை ஐபிஎல் போட்டி நடக்கிறது. இதனால்தான் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. களத்தில் எதிரும் புதிருமான சென்னை - மும்பை அணிகள் இடையிலான போட்டி எப்படி இருக்கும், யார் வெற்றிபெற போவது என்று இப்போதே பீபி எகிற தொடங்கி உள்ளது.

சென்னை தவறு

சென்னை தவறு

இன்று சிஎஸ்கே - எம்ஐ போட்டி நடக்க உள்ள நிலையில், சென்னை அணியின் ஆடும் லெவலில் யார் இருப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. சென்னை அணியில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் விலகி உள்ள நிலையில் ஆடும் லெவலில் யார் விளையாட போகிறார்கள். சென்னை யாரை எல்லாம் களத்தில் இறக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இரண்டு வருடம் முன் சென்னை செய்த தவறு ஒன்று இப்போது அதே அணிக்கே பிரச்சனையாக திரும்பி உள்ளது.

2018ல் செய்யப்பட்ட தவறு

2018ல் செய்யப்பட்ட தவறு

2018 ஐபிஎல் ஏலம் ஜனவரி மாதம் நடந்தது. 2 வருடம் பின் சென்னை அணி ஐபிஎல் தொடரில் i மீண்டும் வந்த நிலையில், இந்த ஏலம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சென்னை அணியும் தோனி, ரெய்னா உள்ளிட்ட முக்கியமான வீரர்களை ரீ-டெயின் செய்து அணியில் எடுத்தது. ஆனால் அஸ்வின் உள்ளிட்ட சென்னையின் பாரம்பரிய வீரர்களை சென்னை அணி கழற்றி விட்டது.

சென்னையில் வீரர்கள்

சென்னையில் வீரர்கள்

2018 தொடரில் சென்னை அணி இளம் வீரர்களை களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரிசையாக வந்த வயதான வீரர்களுக்கு எல்லாம் டிக் அடித்தது. மிகப்பெரிய அளவில் ஷாக் கொடுக்கும் வகையில் வரிசையாக பார்ம் அவுட் வீரர்களை அணியில் எடுத்தது. ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு , ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், டு பிளசிஸ், ரெய்னா என்று சென்னையில் தோனி உட்பட எல்லோரும் 30+ வயது கொண்ட வீரர்கள்.

பெரிய கிண்டல்

பெரிய கிண்டல்

இதனால் மும்பை , பெங்களூர் ரசிகர்கள் எல்லாம் சென்னையை ''கிரிக்கெட் முதியோர் மறுவாழ்வு மையம்'' என்று கூட கிண்டல் செய்தனர். ஆனால் கிண்டலுக்கு இடையே சென்னை அணி இப்படி பழைய வீரர்களை தேர்வு செய்ய காரணம் இருந்தது. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இதற்கு அப்போதே விளக்கம் அளித்து இருந்தார். அதில், ஐபிஎல் என்பது இளம் வீரர்களை கண்டுபிடிக்க நடக்கும் தொடர் கிடையாது.

ஏன் அப்படி

ஏன் அப்படி

இளம் வீரர்களை கண்டுபிடித்து இந்திய அணிக்கு அனுப்பும் தொடர் கிடையாது. அதற்கு ரஞ்சி கோப்பை போட்டிகள் போன்ற தொடர்கள் உள்ளது. ஐபிஎல் என்பது 'பிரான்சைஸ்' போட்டி. இதில் கோப்பையை வெல்வதே முக்கியம். இளம் வீரர்களை வைத்து, அவர்களுக்கு போட்டியை சொல்லிக்கொடுத்து கோப்பையை வெல்ல முடியாது. அதனால் அனுபவம் உள்ளவர்களை அணியில் எடுத்தோம், என்று குறிப்பிட்டார்.

அனுபவம் உள்ள வீரர்கள்

அனுபவம் உள்ள வீரர்கள்

சரியாக திட்டமிட்டு சென்னை தனது அணிக்குள் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுத்தது. அதேபோல் 2018 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ரெய்னா தொடங்கி வாட்சன் வரை எல்லா வீரர்களும் வரிசையாக பார்மிற்கு திரும்பினார்கள். அம்பதி ராயுடு போன்ற வீரர்களும் கூட பார்மிற்கு திரும்பினார்கள். அந்த தொடர் முழுக்க சென்னை அணிதான் டாப்பில் இருந்தது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

அதிலும் ஹைதராபாத்,டெல்லி, மும்பை போன்ற அணிகளை கூட சென்னை எளிதாக வென்றது. கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்து சென்று அனைத்து போட்டிகளிலும் சென்னை திரில் வெற்றி பெற்றது. 2018 தொடரில் சிஎஸ்கேதான் கப் அடித்தது. 2 வருடம் பிறகு பல அவமானங்களை, ஏளனங்களை கடந்து வந்த சென்னை, அந்த தொடரில் தனது கோபத்தை எல்லாம் ஆட்டத்தில் காட்டி கோப்பை வென்றது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

2019லும் இறுதி போட்டி வரை சென்னை சென்றது. ஆனால் அப்போதே சென்னை அணிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதில் இந்த தொடரில் பழைய வீரர்களை வைத்து கோப்பை அடித்துவிட்டீர்கள். அடுத்த தொடரும் கூட ஓகே . ஆனால் அதற்கு பின் என்ன செய்வீர்கள்? 2020, 2021 எல்லாம் வயதான வீரர்களை வைத்து எப்படி ஆடுவீர்கள்.2021க்கு முன் பெரிய அளவில் ஐபிஎல் ஏலம் எதுவும் இருக்காது. இதே வீரர்களை வைத்துதான் விளையாட வேண்டும்.

இதே வீரர்கள் விளையாட்டு

இதே வீரர்கள் விளையாட்டு

இந்த வயதான வீரர்கள் 2020ல் பார்மில் இருப்பார்களா? எதிர்காலத்தை கருத்தில் கொண்டால் இது சிறந்த முடிவு கிடையாது என்று பலரும் சென்னைக்கு அணிக்கு அறிவுரை வழங்கினார்கள். அப்போது சென்னை அணியிடம் இந்த கேள்விக்கு பதில் இல்லை. 2018 தொடரை மட்டுமே கருத்தில் கொண்டு சென்னை அணி எடுத்த முடிவு தற்போது அதே சென்னை அணிக்கு 2 வருடம் கழித்து எதிராக திரும்பி உள்ளது.

வயதான வீரர்கள்

வயதான வீரர்கள்

சென்னை அணியில் தற்போது எல்லா வீரர்களும் பார்ம் அவுட்டில் இருக்கிறார்கள். எல்லோரும் வயதாகி, பெரிய அளவில் கிரிக்கெட் பயிற்சி இன்றி, இருக்கிறார்கள். வாட்சன், தோனி, டு பிளசிஸ், அம்பதி ராயுடு , முரளி விஜய், இம்ரான் தாஹிர் என்று யாருமே பார்மில் இல்லை. ஜடேஜா மட்டுமே பார்மில் இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் சென்னை அணி பார்மில் இல்லாத வீரர்களை வைத்து என்ன செய்யும் என்று கேள்வி எழுந்துள்ளது.

பார்ம் அவுட்

பார்ம் அவுட்

சென்னைக்கு பின் வரும் பிரச்சனைகள் உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஓப்பனிங் -ஒன் டவுன் யாரை இறக்குவது.

எல்லோரும் வயதான வீரர்கள், யாருக்காவது அடிபட்டால் புதிய, இளம் வீரர்களுக்கு எங்கே செல்வது.

கொரோனா ரெஸ்ட் காரணமாக பலர் களத்தில் சொதப்புவார்கள். சென்னைக்கு அணி வீரர்கள் இப்படி சொதப்ப அதிக வாய்ப்புள்ளது.

அணிக்குள் ரெய்னாவும் இல்லை. தோனி மட்டுமே மொத்த அணியை வழி நடத்த போகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் ஸ்பின் பிட்ச் மைதானத்தில் போட்டி நடக்க உள்ள நிலையில் சென்னை அணியில் ஸ்பின் பவுலர்கள் பார்மில் இல்லாததும், ஸ்பீட் பவுலர்கள் மட்டுமே சோபிக்க வாய்ப்பு இருப்பதும் அதிக கவலையை சிஎஸ்கே அணிக்கு தந்துள்ளது.

இதற்கு எல்லாம் 2018லேயே சிஎஸ்கே சரியாக ஏலம் எடுக்காததுதான் காரணம் என்கிறார்கள். அப்போதே கொஞ்சம் யோசித்து ஏலம் எடுத்து இருக்கலாம் என்கிறார்கள்.

மேட்ச் நடக்க போகிறது

மேட்ச் நடக்க போகிறது

இன்று மாலை போட்டி நடக்க உள்ள நிலையில் தற்போது வரை சென்னை அணியில் ஆடும் 11 வீரர்கள் குறித்த முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். யாரை எந்த இடத்தில் இறக்குவது என்று இன்னும் சென்னை அணியில் குழப்பம் நிலவி வருகிறது என்று கூறுகிறார்கள். 2018ல் எடுத்த முடிவின் விளைவுகளை இன்று சென்னை அணி சந்தித்து வருகிறது.. இன்றைய போட்டியின் முடிவில்தான் சென்னை அணி உண்மையில் எந்த அளவிற்கு வலிமையாக இருக்கிறது என்று தெரிந்துவிடும்.

Story first published: Saturday, September 19, 2020, 11:13 [IST]
Other articles published on Sep 19, 2020
English summary
IPL 2020: The 2 years old decision of Chennai Super Kings will hunt the team during this season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X