For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி ஃபார்முலாவை காலி செய்த பிசிசிஐ.. சிஎஸ்கே தோல்வி.. பரபர பின்னணி.. வெளியான ரகசியம்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் 2020 ஐபிஎல் தொடரில் மோசமான தோல்விகளால் துவண்டு போய் இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் தோல்விகளுக்கு என்ன காரணம் என பலரும் விவாதம் செய்து வருகிறார்கள்.

அது குறித்து கடந்த ஐபிஎல் சீசன்களுடன் ஒப்பிட்டு சில அதிர வைக்கும் தகவல்களை கூறி உள்ளனர்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்த நிலையில் 2020 ஐபிஎல் தொடரில் பிசிசிஐ எடுத்த சில முடிவுகள் தான் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவை குழி தோண்டி புதைத்துள்ளன என்கிறார்கள் சில விமர்சகர்கள். பிசிசிஐ முடிவுகள் தோனி பார்முலாவை காலி செய்தது தான் அனைத்திற்கும் முக்கிய காரணம் என்கிறார்கள்.

சிஎஸ்கே தோல்விகள்

சிஎஸ்கே தோல்விகள்

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் பங்கேற்று அதில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பையும் இழக்கும். சிஎஸ்கே தோல்விகளுக்கு அந்த அணி திட்டமே இல்லாமல் ஆடியது ஒரு காரணம்.

பிட்ச் முக்கிய காரணம்

பிட்ச் முக்கிய காரணம்

கடந்த சீசன்களில் சிஎஸ்கே அணியின் போட்டி திட்டங்கள் அனைத்தும் பிட்ச்சை சார்ந்தே இருக்கும். இந்த முறை ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் நிலையில் மூன்று மைதானங்களில் சிஎஸ்கே அணி ஆடி வருகிறது. எந்த பிட்ச் குறித்தும் சிஎஸ்கே அணியால் தெளிவாக திட்டமிட முடியவில்லை.

சேப்பாக்கம் பிட்ச்

சேப்பாக்கம் பிட்ச்

கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச்சை கேப்டன் தோனி சிஎஸ்கே அணிக்கு ஏற்ற படி மாற்றி அமைத்துக் கொண்டதாக சில தகவல்கள் உண்டு. மேலும், சேப்பாக்கம் பிட்ச் இப்படித் தான் செயல்படும் என தோனிக்கு தெளிவாக தெரியும்.

மந்தமான மைதானம்

மந்தமான மைதானம்

சேப்பாக்கம் மைதானம் மந்தமாக செயல்படும். சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும். அதை வைத்தே தோனி அணியை தேர்வு செய்வார். 2020 ஐபிஎல் ஏலத்திலும் கூட ஐந்தாவதாக முழு நேர சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லாவை தேர்வு செய்யக் கூறினார்.

2018 சீசனில் என்ன நடந்தது?

2018 சீசனில் என்ன நடந்தது?

2018 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஒரு போட்டியை மட்டுமே சேப்பாக்கம் மைதானத்தில் ஆடியது. சொந்த மைதானத்தில் ஆட வேண்டிய மற்ற போட்டிகளை புனே மைதானத்தில் ஆடியது. புனே மைதானம் குறித்து தோனிக்கு அத்துப்படி, மேலும், அதை சிஎஸ்கே அணிக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும் என்பதாலேயே அப்போது சிஎஸ்கே அந்த மைதானத்தை தேர்வு செய்தது. அங்கே ஆடிய போட்டிகளில் ஒரு தோல்வி மட்டுமே அடைந்தது.

2019 சீசனில் ஆதிக்கம்

2019 சீசனில் ஆதிக்கம்

2019 சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் தான் சிஎஸ்கே அணி சொந்த மைதானத்தில் ஆட வேண்டிய ஏழு போட்டிகளில் ஆடியது. அதில் ஒரு தோல்வி மட்டுமே அடைந்தது. சொந்த மைதான பிட்ச்சை ஓரளவு சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாற்றி வெற்றி பெறுவது தான் தோனி ஃபார்முலா.

பிசிசிஐ எடுத்த முடிவுகள்

பிசிசிஐ எடுத்த முடிவுகள்

ஆனால், 2020 ஐபிஎல் தொடரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது, அங்கே துபாய், அபுதாபி, ஷார்ஜா என மூன்று மைதானங்களில் எட்டு அணிகளும் போட்டிகளில் பங்கேற்க வேண்டிய நிலை.

துபாய் ஆடுகளம்

துபாய் ஆடுகளம்

சிஎஸ்கே அணியால் பிட்ச்களை தங்கள் அணிக்கு ஏற்ப மாற்ற முடியாது. பிசிசிஐ எந்த அணிக்கும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. மறுபுறம் ஏற்கனவே இருக்கும் பிட்ச் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு சிஎஸ்கே அணியால் திட்டங்களை வகுக்க முடியவில்லை.

தோனி திட்டம் நிறைவேறவில்லை

தோனி திட்டம் நிறைவேறவில்லை

ஆக மொத்தத்தில் தோனியின் கடந்த சீசன்களின் வெற்றி ஃபார்முலா, இந்த சீசனில் நிறைவேறவில்லை. வயதான வீரர்கள் கொண்ட அந்த அணி மற்ற அணிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வி அடைந்து வருகிறது.

Story first published: Wednesday, October 21, 2020, 20:19 [IST]
Other articles published on Oct 21, 2020
English summary
IPL 2020 : This is how Dhoni formula failed to work. BCCI decision to conduct IPL in UAE caused more trouble to CSK.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X