இவ்ளோ நடந்ததுக்கு அப்புறம் ஒட்டும் வேணாம்.. உறவும் வேணாம்! ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு பிரியும் சீனியர்

Ajinkya Rahane in Delhi capitals | IPL 2020 | ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு பிரியும் ரஹானே

ஜெய்ப்பூர் : ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வேறு அணிக்கு மாற்றப்பட இருக்கிறார் மூத்த வீரர் ரஹானே.

அஜின்க்யா ரஹானே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த 9 வருடங்களாக ஆடி வருகிறார்.

கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவருக்கு சில கசப்பான அனுபவங்கள் நடந்தன. அதையடுத்து இந்த 2020 ஐபிஎல் தொடரில் அவர் வேறு அணிக்கு செல்ல இருக்கிறார்.

நம்பர் 1 கோலி, பும்ரா.. நம்பர் 2 ரோகித் சர்மா.. தரவரிசையில் கெத்து காட்டிய இந்திய வீரர்கள்!

2011இல் வந்தார்

2011இல் வந்தார்

2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வந்தார் அஜின்க்யா ரஹானே. அப்போது இளம் வீரராக இருந்த அவர், ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராக இருந்தார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

பேட்டிங்கில் டாப் ஆர்டரில் சிறப்பாக ஆடி ரன் குவித்தார். ஐபிஎல் தொடரில் சதம் அடித்தும் பட்டையைக் கிளப்பி இருந்தார். ராஜஸ்தான் அணி பல தொடர்களில் பிளே-ஆஃப் செல்லாவிட்டாலும், அணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டே வந்தார் ரஹானே.

கேப்டன் ஆனார்

கேப்டன் ஆனார்

2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடையில் இருந்து மீண்டு வந்த போது அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் ரஹானே. அந்த முறை பிளே-ஆஃப் சென்றது ராஜஸ்தான்.

தோல்விகள்

தோல்விகள்

அதன் பின் 2019ஆம் ஆண்டு ரஹானே தலைமையில் ஆடிய ராஜஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து துவண்டது. அணியில் ஸ்டீவ் ஸ்மித், ஜோப்ரா ஆர்ச்சர் என சிறந்த வீரர்கள் இருந்த போதும் அந்த அணியால் வெற்றிகளை குவிக்க முடியவில்லை.

பேட்டிங் சறுக்கல்

பேட்டிங் சறுக்கல்

ரஹானேவின் பேட்டிங்கும் அந்த சீசன் துவக்கத்தில் சறுக்கியது. நிதான ஆட்டம் ஆடிய ரஹானே, தனிப்பட்ட முறையில் அணிக்கு பின்னடைவை அளித்து வந்தார். அதனால், அவர் மீது விமர்சனம் எழுந்தது.

பதவி நீக்கம்

பதவி நீக்கம்

அந்த நிலையில், ரஹானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக அறிவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அது ரஹானேவுக்கு பெரிய பின்னடைவாக இருந்தது.

வெகுண்டு எழுந்தார்

வெகுண்டு எழுந்தார்

கேப்டன் பதவி பறிபோனாலும் அணியில் இடம் பெற்ற ரஹானே, அதிரடியாக ஆடி அசத்தினார். தன் இரண்டாவது ஐபிஎல் சதத்தையும் அடித்து மிரட்டினார். அந்த சீசனில் 14 போட்டிகளில் 393 ரன்கள் குவித்து சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

அணி மாற்ற முடிவு

அணி மாற்ற முடிவு

அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், அனுபவ வீரர் என்றாலும், கேப்டன் பதவியை பறித்த விவகாரத்தில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாக தகவல் வந்தது.

பஞ்சாப் அணி பேச்சு

பஞ்சாப் அணி பேச்சு

இந்த நிலையில் 2020 ஐபிஎல் தொடரில் வேறு அணிக்கு ரஹானேவை அணி மாற்றம் செய்ய ராஜஸ்தான் அணி நீண்ட காலமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. பஞ்சாப் அணியிடம் அஸ்வினை வாங்க முயற்சி செய்த போது, ராஜஸ்தான் அணி, ரஹானேவை மாற்றம் செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது.

டெல்லி கடும் முயற்சி

டெல்லி கடும் முயற்சி

எனினும், கங்குலி ஆலோசகராக இருந்த போது டெல்லி கேபிடல்ஸ் அணியை ரஹானேவை வாங்குமாறு ஆலோசனை கூறி இருந்தார். அந்த அணி ரஹானேவை வாங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ரஹானேவுக்கு மாற்றாக இரு வீரர்களை டெல்லி அணி, ராஜஸ்தான் அணிக்கு மாற்றம் செய்யும் எனவும் கூறப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 Transfer : Rahane split with Rajasthan Royals; will move to another team. Delhi Capitals may buy Rahane, says sources.
Story first published: Thursday, November 14, 2019, 16:42 [IST]
Other articles published on Nov 14, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X