For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு மெசேஜ் கூட வரலை.. வீட்டில் சும்மா தான் இருக்கேன்.. ஆப்பு வைத்த கொரோனா.. நொந்து போன இந்திய வீரர்!

மும்பை : கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கிப் போய் கிடக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கரும் வீட்டில் சும்மா அமர்ந்து இருப்பதாக கூறி உள்ளார்.

Recommended Video

CSK வெற்றிக்கு இதான் காரணம் - Rahul Dravid கருத்து

தன் ஐபிஎல் அணி தனக்கு ஒரு மெசேஜ் கூட செய்யவில்லை எனவும் நொந்து போய் கூறி உள்ளார்.

நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் பயம் அளிப்பதாக இருப்பதாகவும், தன் வீட்டில் தான் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

உயிரைப் பணயம் வைச்சு வேலை செஞ்சா இப்படியா அடிப்பீங்க? கொந்தளித்த ஹர்பஜன் சிங்.. ஷாக் சம்பவம்!உயிரைப் பணயம் வைச்சு வேலை செஞ்சா இப்படியா அடிப்பீங்க? கொந்தளித்த ஹர்பஜன் சிங்.. ஷாக் சம்பவம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் உலகில் சுமார் 180 நாடுகளுக்கும் மேல் பரவி விட்டது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் மிக மோசமான நிலையை அடைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.

விளையாட்டுப் போட்டிகள் நிலை

விளையாட்டுப் போட்டிகள் நிலை

இந்த வைரஸ் கூட்டமாக இருக்கும் இடங்களில் வேகமாக பரவும் என்பதால் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் முடங்கிப் போய் உள்ளன. இந்தியாவின் பிரம்மாண்ட தொடரான ஐபிஎல் தொடரும் இதில் அடக்கம். அந்த தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

ஐபிஎல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னும் ஐபிஎல் தொடங்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இந்த நிலையில் அது குறித்து பேசினார் விஜய் ஷங்கர்.

மெசேஜ் இல்லை

மெசேஜ் இல்லை

அவரது ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து தகவல் வந்ததா என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "எந்த மெசேஜும் வரவில்லை, ஒன்றுமே இல்லை. ஆனால், இந்த சூழ்நிலையில் எதுவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை." என்றார்.

பயமாக உள்ளது

பயமாக உள்ளது

மேலும், "தான் வீட்டில் எதுவும் செய்யாமல் சும்மா அமர்ந்து இருக்கிறேன். ஐபிஎல் அல்லது கிரிக்கெட் பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. ஏனெனில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பீதியாக உள்ளது." எனக் குறிப்பிட்டு தன் பயத்தை கூறினார்.

இத்தாலி நிலை ஏமாற்றம்

இத்தாலி நிலை ஏமாற்றம்

மேலும், "இத்தாலி, மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் தகவல்கள் மிகவும் ஏமாற்றமாக உள்ளது. இப்போது நான் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதை பற்றித் தான் சிந்தித்து கொண்டு இருக்கிறேன். வீட்டுக்குள் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் செய்து வருகிறேன்" என்றார்.

Story first published: Thursday, March 26, 2020, 20:43 [IST]
Other articles published on Mar 26, 2020
English summary
IPL 2020 : Vijay Shankar says no message from IPL franchise
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X