கொஞ்சம் பொறுமையா இருங்க.. மும்பை வீரரிடம் நேரடியாக பேசிய தோனி.. என்ன நடந்தது? - செம பின்னணி

துபாய்: மும்பை அணியின் இளம் வீரர் ஒருவரிடம் சிஎஸ்கே கேப்டன் தோனி சில வருடங்களுக்கு முன் பேசிய விஷயம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

2020 ஐபிஎல் தொடர் முழுக்க மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மும்பை அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் மிக சிறப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று டெல்லியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது. மீண்டும் கோப்பையை வெல்லும் நோக்கத்தோடு மும்பை அணி இன்று ஆட உள்ளது.

எப்படி

எப்படி

இந்த தொடரில் மும்பை அணியின் வெற்றிக்கு பல வீரர்கள் உதவினார்கள். மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷான், பல முறை அந்த அணியின் வெற்றிக்கு உதவினார். மூன்று போட்டிகளில் இஷான் கிஷானின் ஆட்டம்தான்.. அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

வாய்ப்பு கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைக்கவில்லை

இந்த தொடரில் இஷான் கிஷான் மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார். ஆனாலும் அவருக்கு ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டி 20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இவர் கலக்கத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இஷான் கிஷானிடம் சிஎஸ்கே கேப்டன் தோனி சில வருடங்களுக்கு முன் பேசிய விஷயம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

2017ல் ஜார்க்கண்ட் அணிக்காக சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் இஷான் கிஷான் ஆடி வந்தார். அப்போது இஷான் கிஷானை சந்தித்த தோனி அவரிடம் முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். அதில், நீங்கள் நன்றாக ஆடுகிறீர்கள். உங்களிடம் நிறைய வித்தியாசமான ஷாட்கள் இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக ஆடுங்கள்.

நீண்ட நேரம்

நீண்ட நேரம்

களத்தில் நேரம் எடுத்துக் கொண்டு .. பின் அதிரடியாக ஆடுங்கள். விக்கெட் கீப்பாராவும் நன்றாக ஆடுகிறீர்கள். அதேபோல் பீல்டிங்கும் நன்றாக செய்கிறீர்கள். சில நாட்கள் காத்திருங்கள்.. பொறுமையாக இருங்கள்.. உங்களுக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது, என்று இஷான் கிஷானிடம் தோனிகுறிப்பிட்டுள்ளார்.

செம

செம

மும்பை அணியில் இருக்கும் இஷான் கிஷானை சிஎஸ்கே அணி அடுத்த வருடம் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது. சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் வீரராக தோனி அடுத்த வருடம் ஆடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

வைரல்

வைரல்

இந்த நிலையில்தான் மும்பை வீரரிடம் தோனி பேசிய இந்த பழைய உரையாடல் வைரலாகி வருகிறது. இதனால் கண்டிப்பாக இஷான் கிஷானை தோனி அணியில் எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Wait for your call, said Dhoni to Ishan Kishan in 2017 goes viral now
Story first published: Tuesday, November 10, 2020, 16:03 [IST]
Other articles published on Nov 10, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X