For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்!

துபாய்: சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் வாட்சன், தன்னுடைய பாட்டி இறந்த துக்கத்திலும் கூட சென்னை அணிக்காக நேற்று பேட்டிங் செய்துள்ளார்.

நேற்று துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி 175 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன்பின் இறங்கிய சென்னை 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

முதலில் டாஸ் வென்று போட்டியின் போக்கை தீர்மானிக்கும் சாதகம் இருந்தும் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது.

ரெய்னா திரும்பி வர மாட்டார்.. என்ன செய்வது என்று வீரர்களுக்கு தெரியும்.. சிஎஸ்கே சிஇஓ பரபர அறிவிப்புரெய்னா திரும்பி வர மாட்டார்.. என்ன செய்வது என்று வீரர்களுக்கு தெரியும்.. சிஎஸ்கே சிஇஓ பரபர அறிவிப்பு

சோகமான பின்னணி

சோகமான பின்னணி

இந்த போட்டியின் போது சென்னை அணியின் வீரர் வாட்சன் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். 16 பந்துகள் பிடித்த அவர் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவர் மீது இதனால் நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆட்டத்திற்கு பின் இருக்கும் சோகமான பின்னணி தற்போது வெளியாகி உள்ளது.

என்ன நிலைமை

என்ன நிலைமை

அதன்படி இந்த போட்டிக்கு முதல் நாள்தான், வாட்சனின் பாட்டி காலமாகி உள்ளார். இவரின் அம்மாவின் அம்மா வயோதிகம் காரணமாக காலமாகிவிட்டார். சிறு வயதில், வாட்சனை வளர்த்தவர் இவர்தான். சரியாக போட்டிக்கு முதல் தினம் இவர் காலமானார்.

ஆனால் செல்லவில்லை

ஆனால் செல்லவில்லை

இந்த செய்தி வந்ததும், வாட்சன் சொந்த ஊருக்கு செல்ல போகிறாரா என்று அணி நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது. ஆனால் இவர் துக்கத்தை மறைத்துக் கொண்டு சிஎஸ்கே அணியுடன் பயிற்சியில் இணைந்து இருக்கிறார். அதோடு மறுநாளே இந்த சோகத்தோடு டெல்லிக்கு எதிரான போட்டியில் விளையாடி உள்ளார்.

பெரிய சோகம்

பெரிய சோகம்

அணியில் இருந்து ஏற்கனவே முக்கிய வீரர்கள் வெளியேறிவிட்டார்கள். நானும் சென்றால் நன்றாக இருக்காது. அதனால் நான் போட்டியில் விளையாடுவேன். சிஎஸ்கே அணிக்கு தூணாக இருப்பேன் என்று கூறி உள்ளார். அதோடு மறுநாள் போட்டியிலும் விளையாடினார்.

கடந்த வருடம்

கடந்த வருடம்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வாட்சன், நான் என் பாட்டியை இழந்துவிட்டேன். இப்போது என்னால் வீட்டிற்கு செல்ல முடியாது. என்னுடைய அன்பு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். என் பாட்டியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று வாட்சன் கூறியுள்ளார்.

எப்படி ஆடினார்

எப்படி ஆடினார்

கடந்த வருடமும் சென்னை அணிக்காக வாட்சன் இதேபோல் காலில் ரத்தம் சொட்ட சொட்ட ஆடினார். இறுதி போட்டியில் இவர் காலில் ரத்தம் வந்தது. ஆனாலும் கூட கவலையின்றி சென்னைக்காக ஆடினார். இந்த நிலையில் நேற்று போட்டியிலும் தன் கவலையை மறைந்து சிஎஸ்கேவிற்காக ஆடியுள்ளார்.

Story first published: Saturday, September 26, 2020, 23:31 [IST]
Other articles published on Sep 26, 2020
English summary
IPL 2020: Watson played for CSK match the day after his grandmother dies day before yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X