For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி வெறும் சிக்ஸ் தான்.. களைகட்டிய ஐபிஎல்.. கும்பலாக வந்திறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள அத்தனை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் மொத்தமாக துபாய் வந்திறங்கி உள்ளனர்.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்று விட்டு, அவர்கள் அனைவரும் துபாய் வந்து தங்கள் அணிகளுடன் இணைந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடுபவர்கள் என்பதால் அவர்கள் வரவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது நல்ல செய்தியாக அமைந்தது.

யாருப்பா அது? ஐபிஎல்-இல் ஆடும் முதல் அமெரிக்க வீரர்! பிராவோ கண்டெடுத்த முத்து.. கொல்கத்தாவின் சொத்துயாருப்பா அது? ஐபிஎல்-இல் ஆடும் முதல் அமெரிக்க வீரர்! பிராவோ கண்டெடுத்த முத்து.. கொல்கத்தாவின் சொத்து

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள மற்ற நாடுகளை சேர்ந்த வேறு சில வீரர்களும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து நேரடியாக துபாய் வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் அணிகளுடன் இணைந்தனர்.

மூன்று நகரங்கள்

மூன்று நகரங்கள்

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மூன்று நகரங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

துபாயில் ஆறு, அபுதாபியில் இரண்டு

துபாயில் ஆறு, அபுதாபியில் இரண்டு

இந்த தொடரில் பங்கேற்க உள்ள எட்டு அணிகளும் துபாய் மற்றும் அபுதாபியில் முகாமிட்டுள்ளனர். துபாயில் ஆறு அணிகளும், அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் முகாமிட்டுள்ளன.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் ஐபிஎல்-இல் பங்கேற்க உள்ள அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் சில வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

அந்த தொடரின் இறுதிப் போட்டி செப்டம்பர் 10 அன்று நடைபெற்றது. அந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர்களால் நடத்தப்படும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர்களால் நடத்தப்படும் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியும் மோதின.

துபாய் வந்தனர்

துபாய் வந்தனர்

அந்தப் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இறுதிப் போட்டி முடிந்த நிலையில், ஐபிஎல்-இல் ஆட உள்ள அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் பிற வெளிநாட்டு வீரர்கள் துபாய் வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் அணிகளுடன் இணைந்து குவாரன்டைனில் உள்ளனர்.

கும்பலாக சுத்துவோம்

கும்பலாக சுத்துவோம்

ஐபிஎல்-இல் ஆடும் இந்திய வீரர்கள் மூன்று மாதங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மொத்தம் ஐந்து மாதங்கள் கும்பலாக சுற்றி வர உள்ளனர்.

வீரர்கள்

வீரர்கள்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்ற டிவைன் பிராவோ, இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் சிஎஸ்கே அணியிலும், கீரான் பொல்லார்டு, ரூதர்போர்டு, கிறிஸ் லின் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், சுனில் நரைன், கிறிஸ் க்ரீன், ஆண்ட்ரே ரஸ்ஸல் கொல்கத்தா அணியிலும் பங்கேற்க உள்ளனர்.

IPL 2020 : West Indies players and other CPL players reached their IPL teams
Story first published: Saturday, September 12, 2020, 21:00 [IST]
Other articles published on Sep 12, 2020
English summary
IPL 2020 : West Indies players and other CPL players reached their IPL teams ahead of IPL 2020 season. Fans expect their presence mostly to witness their hard hitting action.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X