For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்பட்டமாக தெரியும் உரசல்.. தோனி ஒன்று சொல்ல.. பிளமிங் ஒன்று சொல்கிறார்.. சிஎஸ்கேவில் என்ன நடந்தது?

துபாய்: சிஎஸ்கேவில் கேப்டன் தோனிக்கும் பயிற்சிக்கு பிளமிங்கிற்கும் உறவு சரியாக இருக்கிறதா என்று கேள்விகள் எழ தொடங்கி உள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக தொடரை சிஎஸ்கே இந்த முறை ஆடி வருகிறது. 10 போட்டிகளில் வெறும் 3 போட்டியில் வென்று சிஎஸ்கே புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே தொடக்கத்தில் தோல்வி அடைந்தாலும் விரைவில் மீண்டு வரும் அணியாகவே இதுவரை இருந்துள்ளது. ஆனால் இந்த முறை சிஎஸ்கே அணி எவ்வளவு முயன்றும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியவில்லை.

சிஎஸ்கே எப்படி

சிஎஸ்கே எப்படி

சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு காரணமாக பயிற்சியாளர் ஸ்டிபன் பிளமிங் சில முக்கியமான விஷயங்களை அடுக்கி உள்ளார். அதில், சிஎஸ்கேவின் நிலை தற்போது எப்படி இருக்கிறது என்று புள்ளிகள் பட்டியலை பார்த்தாலே தெரியும்.சிஎஸ்கே அணி வீரர்களிடம் இருந்த சரக்கு காலியாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஆம் சிஎஸ்கே அணி வீரர்களிடம் இருந்த திறமை முடிந்துவிட்டது.

மூன்று வருடம்

மூன்று வருடம்

கடந்த மூன்று வருட சீசன்களை எடுத்துக் கொண்டாலே தெரியும். முதல் வருடம் நாங்கள் கோப்பையை வென்றோம். இரண்டாம் வருடம் நாங்கள் பைனல் வரை சென்றோம். கடைசி பந்தில் தோல்வி அடைந்தோம். இந்த வருடம் ஐபிஎல் தொடர் கஷ்டமாக இருக்க போகிறது என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும். நாங்கள் எதிர்பார்த்துதான் இந்த விஷயம் நடந்தது.

வீரர்கள் வயது

வீரர்கள் வயது

எங்கள் அணியில் பல வீரர்களுக்கு வயதாகிவிட்டது. இதன் காரணமாக அவர்களால் முன்பு போல ஆட முடியவில்லை. 3 வருடம் முன் நாங்கள் எடுத்த அணியை விட இப்போது இருக்கும் அணி இன்னும் வயதான அணியாக இருக்கிறது. வீரர்களிடம் இருந்த பழைய பார்மை மீட்டு கொண்டு வருவது கடினம்.

மற்ற அணிகள் எப்படி

மற்ற அணிகள் எப்படி

மற்ற அணிகள் இந்த தொடரில் நன்றாக ஆடி வருகிறது. இனி நாங்கள் சரியாக விளையாடினாலும் பிளே ஆப் செல்வது கஷ்டம்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாசிட்டிவாக இருக்க முடியாது என்று என்று பிளமிங் கூறி உள்ளார். அணியில் இருக்கும் வயதான வீரர்களை பிளமிங் சாடி இருக்கிறார். வயதான வீரர்கள் சரியான பார்மில் இல்லை.. அவர்களிடம் சரக்கு இல்லை என்று பிளமிங் கூறியுள்ளார்.

ஸ்பார்க் இல்லை

ஸ்பார்க் இல்லை

ஆனால் இன்னொரு பக்கம் தோனியோ அணியில் இருக்கும் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை. அவர்களிடம் ஸ்பார்க் இல்லாத காரணத்தால்தான் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு பக்கம் மூத்த வீரர்களிடம் சரக்கு இல்லை என்று பிளமிங் விமர்சனம் செய்துள்ளார்.

ஆனால் தோனி

ஆனால் தோனி

ஆனால் இன்னொரு பக்கம் தோனி இளம் வீரர்களை விமர்சனம் செய்துள்ளார். இரண்டு பேருமே வேறு வேறு கருத்துக்களை தெரிவித்து புயலை கிளப்பி உள்ளனர். இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பே அணியின் தோல்விக்கு பிளமிங் ஒரு காரணத்தை குறிப்பிட்டார். தோனி வேறு காரணத்தை குறிப்பிட்டார். தோனி ஒவ்வொரு முறையும் பிட்ச் மீது புகார் வைத்தார்.

பிட்ச் காரணம்

பிட்ச் காரணம்

சிஎஸ்கே தோல்வி அடைய பிட்ச்தான் காரணம் என்றார். ஆனால் பிளமிங் மூத்த வீரர்கள் சரியாக ஆடவில்லை. ஸ்பின் சரியாக கைகொடுக்கவில்லை என்று வெளிப்படையாக புகார்களை அடுக்குகிறார்கள். இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே பிளமிங் ஒரு கருத்தையும், தோனி வேறு ஒரு கருத்தையும் கூறி வருகிறார்கள். இதனால் சிஎஸ்கே அணிக்குள் பிளமிங் தோனி இடையே உறவு சரியாக இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

வேறு என்ன

வேறு என்ன

தோனி , பிளமிங் இடையிலான உரசல் இப்போதுதான் வெளியே தெரிய தொடங்கி உள்ளது. அதேபோல் சிஎஸ்கே தொடரின் தொடக்கத்தில்தான் ரெய்னா வெளியேறினார். அதற்கான உண்மையான காரணமும் தெரியவில்லை. இதனால் சிஎஸ்கேவில் உண்மையில் என்னதான் பிரச்சனை நிலவுகிறது. அணியில் முடிவுகளை எல்லாம் யார்தான் எடுக்கிறார். தோனிதான் பிரச்சனைக்கு காரணமா? இல்லை வேறு எதுவும் தீர்க்க முடியாத பிரச்சனை இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, October 21, 2020, 19:05 [IST]
Other articles published on Oct 21, 2020
English summary
IPL 2020: What is happening between Dhoni and Fleming in the CSK team?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X