For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"டீமிற்காக செய்ததை மறக்க வேண்டாம்".. தோனியின் ஈகோ.. சிஎஸ்கேவிற்குள் பூதாகரமாகும் பிரச்சனை.. பின்னணி

துபாய்: சிஎஸ்கே அணிக்குள் ஜெகதீசன், இம்ரான் தாஹிர் இருவரும் சேர்க்கப்படாதது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இதனால் அணிக்குள் பெரிய பிரச்சனை வெடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சிஎஸ்கே பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய எல்லா வருடமும் சிஎஸ்கே பிளே ஆப் சென்று இருக்கிறது.

ஆனால் இந்த முறை சிஎஸ்கே பிளே ஆப் செல்வது ஏறத்தாழ கனவாகிவிட்டது. மிக மோசமான தொடர் தோல்விகள் காரணமாக சிஎஸ்கே இந்த முறை வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

என்ன காரணம்

என்ன காரணம்

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. என்ன காரணம் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் என்றால் அது கேப்டன் தோனி. ஒரு கேப்டனாக தோனி எடுத்த தவறான முடிவுகள்தான் அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக இருக்கிறது. பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி, பேட்டிங் ஆர்டர் வரை பல விஷயங்களில் தோனி எடுத்த தவறான முடிவுதான் அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது.

அணி தேர்வு

அணி தேர்வு

முக்கியமாக ஒவ்வொரு போட்டியிலும் தோனி தேர்வு செய்யும் அணிகள்தான் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. மைதானத்திற்கு தகுந்தபடி அணியில் வீரர்களை தேர்வு செய்ய தோனி தவறி விட்டார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நேற்று அணியில் பிராவோ இல்லை. இதனால் இம்ரான் தாஹிரை உள்ளே கொண்டு வந்திருக்க வேண்டும்.

ஸ்பின்

ஸ்பின்

அதேபோல் நேற்று அபுதாபி பிட்சும் கூட ஸ்பின் பவுலிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது. ஆனால் இவ்வளவு இருந்தும் கூட நேற்று தோனி ஸ்பின் பவுலிங் செய்யும் இம்ரான் தாஹிரை தேர்வு செய்யவில்லை. அவருக்கு பதிலாக ஹஸல்வுட்டை அணியில் கொண்டு வந்தார். அதேபோல் நேற்று ஜாதவிற்கு தோனி மீண்டும் அணியில், வாய்ப்பு கொடுத்தார். மீண்டும் வாய்ப்பு கிடைத்த ஜாதவ் இந்த முறையும் மோசமாக சொதப்பினார்.

சொதப்பல்

சொதப்பல்

அணியில் இதற்கு முன் ஒரு போட்டியில் ஆடிய ஜெகதீசன் சிறப்பாகவே பேட்டிங் செய்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல், தொடர்ந்து சொதப்பி வரும் ஜாதவிற்கு தோனி முன்னுரிமை கொடுக்கிறார். இம்ரான் தாஹிர் கடந்த இரண்டு வருடங்களில் அணிக்காக அவ்வளவு விஷயங்களை செய்து இருக்கிறார். டீமிற்காக அவ்வளவு விஷயங்கள் செய்தவரை தோனி தொடர்ந்து புறக்கணிக்கிறார்.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பேசும் தோனி ஏன் தாஹிருக்கு மட்டும் வாய்ப்பு கொடுப்பது இல்லை என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் நேற்று 12 ஓவர்கள் வரை ஒரே ஒரு ஸ்பின் பவுலர் மட்டுமே பவுலிங் செய்தார். ஜடேஜா மட்டுமே பவுலிங் செய்தார். அதற்கு பின்புதான் சாவ்லா பவுலிங் செய்தார். தோனியின் இந்த முடிவும் கூட கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது.

கேள்வி

கேள்வி

இப்படி தோனி எடுக்கும் முடிவுகள் எல்லாமே கடுமையான விமர்சனங்களை சந்திக்க தொடங்கி உள்ளது. தான் எடுக்கும் முடிவுதான் சரி என்று தோனி உறுதியாக இருப்பதும் கூட சர்ச்சையாகி உள்ளது. தோனியிடம் ஈகோ அதிகம் ஆகிவிட்டது. அதனால்தான் இப்படி தவறான முடிவுகளை எடுத்துவிட்டு, அதை சரி என்று வாதம் செய்கிறார் என்றும் புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.

புகார்

புகார்

இந்த பிரச்சனை எல்லாம் இந்த சீசன் முடியும் முன்பே அணிக்குள் பூதாகரமாக வெடிக்கும் என்று கூறுகிறார்கள். இனிதான் பிரச்சனை வெடிக்கும் என்கிறார்கள்.அடுத்த சீசனில் பெரிய அளவில் ஏலம் நடக்காது. இதன் காரணமாக இந்த வருட இறுதியில் பலர் அணியில் இருந்து நீக்கப்படலாம். புதிய வீரர்கள் அணியில் எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, October 20, 2020, 16:36 [IST]
Other articles published on Oct 20, 2020
English summary
IPL 2020: What is really happening inside the CSK team and Dhoni captaincy?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X