For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூவரில் ஒருவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.. தோனி, ஜாதவ், பிளமிங்கை நெருக்கும் சிஎஸ்கே.. என்ன நடந்தது?

துபாய்: சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு மூன்று பேர்தான் காரணமாக சொல்லப்படுகிறார்கள். இந்த மூன்றில் ஒருவர் மீது விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

ஐபிஎல் போட்டிகளில் எப்போதும் கிங்காக இருக்கும் சிஎஸ்கே இந்த சீசனில் மிக மோசமாக ஆடி வருகிறது. இந்த சீசனில் 6 போட்டிகளில் ஆடி இருக்கும் சிஎஸ்கே வெறும் 2 போட்டிகளில் மட்டும்தான் வெற்றிபெற்றுள்ளது.

இதனால் தற்போது சிஎஸ்கே பிளே ஆப் செல்லுமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளால் வீரர்கள் மீது அணி நிர்வாகம் கடும் கோபத்தில் உள்ளது.

எப்படி

எப்படி

கடைசியாக கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. கொல்கத்தாவிற்கு எதிராக வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட சிஎஸ்கே அந்த போட்டியில் தோல்வி அடைந்தது. தோனி எடுத்த தவறான முடிவுகள், மிக மோசமான பேட்டிங் ஆர்டர், ஜாதவ் போன்ற வீரர்களின் பொறுப்பேற்ற ஆட்டம் காரணமாக சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

கேள்விகள்

கேள்விகள்

ஆனால் சிஎஸ்கேவின் தோல்விக்கு ஜாதவ் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. அமீரகத்தில் இருக்கும் பிட்ச்சிற்கு ஏற்றப்படி வீரர்களை பிளமிங் தயார் செய்யவில்லை. வீரர்களுக்கு சரியான பேட்டிங் பயிற்சியை இவர் கொடுக்கவில்லை. பவுலர்களை மட்டும் தயார் செய்துவிட்டு, பேட்ஸ்மேன்களை தயார் செய்யாமல் விட்டுவிட்டார். இதனால் சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் மிக மோசமாக கஷ்டப்படுகிறது என்று புகார் உள்ளது.

தோனி

தோனி

இன்னொரு பக்கம் தோனியின் கேப்டன்சியும் முன்பு போல சிறப்பாக இல்லை. ஓவர் ரொட்டேஷன் சிறப்பாக செய்கிறார். ஆனால் பேட்டிங் ஆர்டர் அனுப்புவதில் சொதப்பி வருகிறார்.முக்கியமாக மிடில் ஆர்டரில் யாரை இறக்க வேண்டும் என்ற தெளிவு தோனிக்கு இல்லை. 6 போட்டிகள் முடிந்த பின்பும் கூட மிடில் ஆர்டரில் யாரை இறக்க வேண்டும் என்று இன்னும் தோனிக்கு தெரியவில்லை என்று புகார் உள்ளது.

தவறு

தவறு

மொத்தத்தில் சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனியும் ஒருவகையில் பொறுப்புதான். அதேபோல் இன்னொரு பக்கம் கேதார் ஜனதாவின் மோசமான பேட்டிங்கும் ஒருவகையில் காரணம்தான். இதெல்லாம் போக சூழ்நிலைக்கு தகுந்தபடி திட்டங்களை மாற்றாத பிளமிங்கும் தோல்விக்கு ஒருவகையில் காரணம்தான். எனவே சிஎஸ்கேவின் தோல்விக்கு இந்த மூவரில் ஒருவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

அணி நிர்வாகம்

அணி நிர்வாகம்

இந்த மூன்று பேரிடமும் சிஎஸ்கே அணி நிர்வாகம் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளது. ஜாதவிற்கு தொடந்து வாய்ப்பு வழங்குவது ஏன் என்பது தொடங்கி வீரர்களின் பேட்டிங் ஆர்டர் வரை பல விஷயங்களை சிஎஸ்கே நிர்வாகம் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளது. தொடர் தோல்விகளுக்கு யார் பொறுப்பேற்பது என்று அணி நிர்வாகம் கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளது என்கிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

ரசிகர்களும் இதே கேள்வியைதான் வைக்க தொடங்கி உள்ளனர். சிஎஸ்கே தோல்விக்கு ஜாதவ் மட்டும் பொறுப்பு இல்லை. இந்த மூவருமே பொறுப்புதான். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அணியில் உடனே மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. நாளை சிஎஸ்கே பெங்களூர் போட்டி நடக்க உள்ள நிலையில் இன்றே முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Friday, October 9, 2020, 11:20 [IST]
Other articles published on Oct 9, 2020
English summary
IPL 2020: Who is the real for CSK loss in consecutive matches?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X