For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஒரு மேட்ச் பார்த்து உலகமே ஆடிப்போனது.. தோனிக்கு பறந்த மெசேஜ்.. ரெய்னா இடத்தில் இறங்கும் வீரர்?

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவின் இடத்தில் தோனி யாரை களமிறக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ள நிலையில், தோனி இதற்காக செம பிளான் ஒன்றை போட்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.

ஐபிஎல் திருவிழா தொடங்கிவிட்டது. இன்று நடக்க போகும் மாபெரும் போட்டிக்காக சென்னை - மும்பை இரண்டு அணிகளும் தயார் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 7 மாத ஓய்விற்கு பிறகு கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் களத்தில் இறங்கி ஆட உள்ளனர்.

கொரோனாவிற்கு இடையே நடக்க போகும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக ஐபிஎல் தொடர் மாறி உள்ளது. சென்னை - மும்பை இடையே இன்று நடக்கும் தொடருக்கு இப்போதே பீபி எகிற தொடங்கி உள்ளது.

இந்தமுறை வேற மாதிரி இருக்கும்.. தோனி மொத்தமாக மாறிவிட்டார்.. சிஎஸ்கே கோச் உடைத்த செம சீக்ரெட்!இந்தமுறை வேற மாதிரி இருக்கும்.. தோனி மொத்தமாக மாறிவிட்டார்.. சிஎஸ்கே கோச் உடைத்த செம சீக்ரெட்!

சென்னை ஏன்

சென்னை ஏன்

அதிலும் மும்பை அணி இந்த சீசனில் மிகவும் வலிமையாக இருக்கிறது. மூத்த வீரர்கள், இளம் வீரர்கள், சரியான பவுலிங் டீம், பேட்டிங் ஆர்டர் என்று மும்பை கிட்டத்தட்ட சமமான கலவையுடன் இருக்கிறது. ஆனால் சென்னை அணி எல்லா இடத்திலும் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பேட்டிங் ஆர்டர், பவுலிங் லைன் அப், ஓப்பனிங், ஒன் டவுன் என்று சென்னைக்கு அனைத்து பக்கமும் பிரச்சனை இருக்கிறது .

சென்னை நிலை எப்படி

சென்னை நிலை எப்படி

அதிலும் சென்னை அணியில் இரண்டு முக்கியமான வீரர்கள் வெளியேறி விட்டனர். ரெய்னா, ஹர்பஜன் இருவரும் வெளியேறிவிட்டனர். அதன்பின் சென்னை அணியில் மூன்றாவது இடத்தில் ஆடக்கூடிய வீரர் என்று கணிக்கப்பட்ட ருத்துராஜ் கெய்காவாட் மீண்டும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் கொரோனாவில் இருந்து மீண்டும் வந்தாலும் உடனே அணியில் விளையாட முடியாது.

என்ன செய்வது

என்ன செய்வது

இதனால் தற்போது சென்னை அணியில் ரெய்னா இடத்தில் யார் இறங்க போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் தொடக்க வீரர்களாக டு பிளசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் இறங்க வாய்ப்புள்ளது. நான்காவது இடத்தில் அம்பதி ராயுடு களமிறங்க வாய்ப்புள்ளது. 5வது இடத்தில் தோனி இறங்குவார். மூன்றாவது இடத்தில் நிலவும் வெற்றிடத்திற்கு தோனி புதிய சோதனை முயற்சி ஒன்றை செய்து பார்க்க போகிறார் என்கிறார்கள்.

என்ன சோதனை

என்ன சோதனை

பொதுவாக ஒன் டவுனில் ஹிட்டர்கள் இறங்குவது ஐபிஎல் போட்டியில் சகஜம். கொல்கத்தா போன்ற அணியில் சுனில் நரேன் போன்ற வீரர்கள் டாப் ஆர்டரில் களமிறக்கப்பட்டு,அது பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. சென்னை அணியும் இதேபோல் ஒரு சோதனையை செய்ய போகிறது என்று கூறுகிறார்கள். சென்னையில் மூன்றாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ஒருவரை இறக்க வாய்ப்புள்ளதாம்... அந்த வீரர் ஜடேஜாவாக இருக்கலாம் என்கிறார்கள்.

யார் அவர்

யார் அவர்

கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் சிறந்த பார்மில் இருந்தும் கூட ஜடேஜாவிற்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான போட்டிகளை ஓப்பனிங் வீரர்கள், அல்லது தோனி, மிஞ்சி போனால் பிராவோவே பினிஷ் செய்து விட்டனர். இதனால் ஜடேஜா பெரிய அளவில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். இந்த நிலையில் பேட்டிங் லைன் அப்பில் அவருக்கு புரோமோஷன் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

பேட்டிங் எப்படி

பேட்டிங் எப்படி

சுனில் நரேன் போல, பேட்டிங் ஆர்டரில் முன்பே இறங்கி இவர் மேஜிக் நிகழ்த்த வாய்ப்புள்ளது.அதேபோல் தனக்கு ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், ஜடேஜா தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். அதிலும் கடந்த உலகக்கோப்பை தொடரில் ஜடேஜா மிகவும் சிறப்பாக ஆடினார். செமி பைனல் போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக ஜடேஜா மட்டும் இல்லையென்றால், இந்தியா மோசமாக தோல்வி அடைந்து இருக்கும்.

ஜடேஜா எப்படி

ஜடேஜா எப்படி

அந்த போட்டியில் 59 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில் அசால்ட்டாக ஜடேஜா நியூசிலாந்து பவுலிங்கை துவம்சம் செய்தார். இந்த போட்டி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அப்போதே, ஜடேஜாவை முன்பே இறக்கிவிட்டு இருக்கலாம். இன்னும் கூடுதல் பால்களை அவர் எதிர்கொண்டு இருந்தால், நிறைய ரன் அடித்து இருப்பார் என்று கூறப்பட்டது.

கடைசியில் வருகிறார்

கடைசியில் வருகிறார்

கடைசியில் எப்போதும் மிகவும் குறைவான பந்துகளில் அதிக ரன் அடிக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போதுதான் ஜடேஜா களத்திற்கே வருகிறார். ஆனால் அந்த சூழ்நிலையிலும் அவர் சிறப்பாக ஆடுகிறார். இதனால் அவருக்கு பேட்டிங் லைன் அப்பில் முன்பே இடம் கொடுத்தாலும் இன்னும் சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளது. இதனால் ரெய்னா இடத்தில் ஜடேஜாவை இறக்கிவிட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

மெசேஜ்

மெசேஜ்

இது தொடர்பாக தோனிக்கு சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜடேஜாவிற்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சிஎஸ்கேவில் இருக்கும் சில ஆலோசகர்கள் தோனிக்கு மெசேஜ் தட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. தோனி இந்த திட்டத்தை மனதில் வைத்து இருக்கிறார். முதல் போட்டியில் தோனி இந்த ரிஸ்க்கை எடுக்க வில்லை என்றால் வரும் போட்டிகளில் ஜடேஜாவிற்கு வாய்ப்பு அளிப்பார் என்கிறார்கள்.

Story first published: Saturday, September 19, 2020, 10:14 [IST]
Other articles published on Sep 19, 2020
English summary
IPL 2020: Who will be playing at no.3 in Chennai Super Kings against Mumbai Indians.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X