சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன்?.. மிக முக்கியமான வீரருக்கு ஸ்கெட்ச்.. தோனி போடும் செம பிளான்!

சென்னை: சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யார் வருவார் என்று இப்போதே கேள்விகள் எழ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் முக்கியமான வீரர் ஒருவரை கேப்டன் பதவிக்கு எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் எல்லா அணிகளும் அதிரடியாக ஆடி வரும் நிலையில் சென்னை மட்டும் மோசமாக சொதப்பி வருகிறது.

எப்போதும் தொடக்கத்தில் இருந்து கலக்கும் சிஎஸ்கே இந்த முறை மோசமாக சொதப்பி வருகிறது. இதனால் சிஎஸ்கேவின் கேப்டன் தோனியின் கேப்டன்சி குறித்து நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.

கேள்விகள்

கேள்விகள்

ஆம், கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி கிரிக்கெட் ஆடவில்லை. அதன்பின் களத்திற்கு வந்து இருக்கும் தோனியிடம் பழைய வேகம் இல்லை. அவரின் கேப்டன்சி திட்டங்களும் கூட பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சின்ன சின்ன அணிகளிடம் எல்லாம் சென்னை சொதப்பி வருகிறது.

ஓய்வு

ஓய்வு

இந்த ஐபிஎல் தொடர்தான் சென்னை கேப்டன் தோனிக்கு கடைசி போட்டியாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த சீசனுக்கு பின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற வாய்ப்புள்ளது. இதனால் சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. சென்னையின் அடுத்த கேப்டனை தேர்வு செய்வதில், தோனியும் முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறுகிறார்கள். சென்னையை வழி நடத்த போகும் அடுத்த வீரர் யார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சென்னை அணியில் யார்?

சென்னை அணியில் யார்?

இந்த நிலையில்தான் சென்னை அணிக்கு விரைவில் கேன் வில்லியம்சன் வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த சீசனிலேயே கூட கேன் வில்லியம்சன் டிரான்ஸ்பர் முறையில் சென்னை அணிக்கு வர வாய்ப்புள்ளது. தற்போது ஹைதராபாத் அணியில் இருக்கும் கேன் வில்லியம்சன் அங்கு விளையாட வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

டேவிட் வார்னரின் வருகையால் கேன் வில்லியம்சனின் கேப்டன்சி நீக்கப்பட்டு உள்ளது.அதேபோல் அவருக்கு அணியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மிக முக்கியமான வீரர் இதனால் தற்போது பெஞ்சில் உட்கார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் இவர் சிறப்பாக விளையாடியும் கூட இந்த முறை இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

ஆனால் இன்னொரு பக்கம் சென்னை அணி சரியான பேட்ஸ்மேன்கள் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறது. ரெய்னா அணியில் இல்லாத காரணத்தால் ஒன் டவுன் வீரர் இல்லாமல் சென்னை கஷ்டப்பட்டு வருகிறது. இதனால் வெட்டியாக இருக்கும் வெட்டுக் கிளி கேன் வில்லியம்சனை கொக்கி போட்டு தூக்க சிஎஸ்கே பிளான் செய்துள்ளது என்கிறார்கள். தோனியும் இந்த பிளானிற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள்.

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

ஐபிஎல் தொடரின் பாதியில் வீரர்களை டிரான்ஸ்பர் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.அப்படி வாய்ப்பு வழங்கப்படும் நிலையில் கேன் வில்லியம்சன் சென்னைக்கு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதேபோல் சென்னைக்கு இவர் வந்தால் எதிர்காலத்தில் சென்னையின் கேப்டனாக கேன் வில்லியம்சனை நியமிக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர் .

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு பெற்றால் அப்போது கேன் வில்லியம்சன் கேப்டனாக பதவி ஏற்கலாம் . கடந்த 2018 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியை கேன் வில்லியம்சன் பைனல் வரை கொண்டு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. தமிழர்களுக்கு இவரை பிடிக்கும் என்பதாலும், தோனியின் இடத்தில் கேன் வில்லியம்சன் இறங்கினால் அது பெரிய குறையாக இருக்காது என்பதாலும்.. கேன் வில்லியம்சனை சிஎஸ்கே அணுக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Who will become the next captain of CSK team? - What is the team plan?
Story first published: Monday, September 28, 2020, 20:37 [IST]
Other articles published on Sep 28, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X