பாதியில் வெளியேறிய பிராவோ.. திரும்பி வரவில்லை.. ஜடேஜாவை அனுப்பியது ஏன்? - தோனி சொன்ன பரபர விளக்கம்!

துபாய்: நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஜடேஜாவை பவுலிங் செய்ய அனுப்பியது ஏன், பிராவோவிற்கு என்ன ஆனது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கி உள்ளார்.

நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. நன்றாக தொடக்கம் இருந்தாலும் சிஎஸ்கே கடைசியில் மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.

நேற்று முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய டெல்லி கடைசி ஓவரில் அதிரடி காட்டி 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

தோனி

தோனி

சிஎஸ்கே தோல்விக்கு பின்பாக பேட்டி அளித்த கேப்டன் தோனி முக்கியமான விஷயங்களை அணியின் தோல்விக்கு காரணமாக குறிப்பிட்டார். அதில், பிராவோ சரியான பிட்னசில் இல்லை. இதனால் பாதி ஆட்டத்தில் அவர் வெளியேறிவிட்டார். அவரால் திரும்ப வர முடியவில்லை. அதனால்தான் ஜடேஜாவிற்கு ஓவர் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

ஜடேஜா

ஜடேஜா

கரண் சர்மா, ஜடேஜா இடையே யாரை அனுப்பலாம் என்று விவாதம் இருந்தது. ஜடேஜாவை அனுப்பினேன். ஆனால் அது போதுமானதாக இல்லை. ஷிகர் தவான் விக்கெட் முக்கியமான காரணமாக இருந்தது. அவரை விக்கெட் எடுத்திருக்க வேண்டும்.

தவான் எப்படி

தவான் எப்படி

அவரை கேட்சை சில முறை விட்டுவிட்டோம். தவான் எல்லாம் அடிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்பார். தனக்கு வரும் வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டே இருப்பார். கிரீஸில் தவான் இருந்தால் தொடர் ஸ்டிரைக் ரேட்டை உயர்த்திக் கொண்டே இருப்பார். அவரின் விக்கெட் முக்கியமானது.

வேறு மாதிரி இருந்தது

வேறு மாதிரி இருந்தது

நாங்கள் ஆடிய ஆட்டத்தின் முதல் பாதியும், இரண்டாம் பாதியும் வேறு மாதிரி இருந்தது. இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்ய வசதியாக இருந்தது. ஆனால் தவானின் ஆட்டம்தான் சிறப்பாக இருந்தது. அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவருக்கு மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தனர், என்று தோனி குறிப்பிட்டார்.

பிராவோ என்ன ஆனது

பிராவோ என்ன ஆனது

நேற்று பீல்டிங் செய்யும் போது கீழே விழுந்ததில் பிராவோ காலில் லேசாக அடிபட்டது. இதனால் அவரால் ஓட முடியவில்லை. 3 ஓவர் போட்டு இருந்த பிராவோவால் கடைசி ஓவரை வீச முடியவில்லை. இவரால் வேகமாக ஓடி வந்து வீச முடியவில்லை. இதனால்தான் நேற்று அவரால் டெத் ஓவரில் பவுலிங் வீச முடியவில்லை.

டெத் ஓவர்

டெத் ஓவர்

கரன் சர்மா தவிர மற்ற எல்லா பவுலர்களும் நேற்று 4 ஓவர்கள் வீசிவிட்டனர்.இதனால் கடைசியில் டெத் ஓவரை வீசுவதற்காக ஜடேஜா வந்து இருக்கிறார். கரன் சர்மா நேற்று சரியாக பவுலிங் செய்யவில்லை. இதன் காரணமாகவே ஜடேஜாவை தோனி அனுப்பினார். ஆனால் அந்த திட்டம் சொதப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Why Jadeja sent in the place of Bravo in the last over? Explains Dhoni.
Story first published: Sunday, October 18, 2020, 8:03 [IST]
Other articles published on Oct 18, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X