For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி ஒரு காரணமா? இஷான் கிஷானை சூப்பர் ஓவரில் பேட்டிங் இறக்காதது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

துபாய்: நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் இஷான் கிஷான் ஏன் சூப்பர் ஓவரில் களமிறங்கவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

உலகிலேயே மிகச்சிறந்த லீக் கிரிக்கெட் போட்டி ஐபிஎல்தான் என்பது நேற்று மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. போட்டியின் தொடக்கத்தில் இருந்து கடைசி இறுதி நோடி வரை ஆட்டம் மிகவும் பரபரப்பாக, விறுவிறுப்பாக சென்றது.

தூங்கிக் கொண்டு இருந்தவர்களை பாதியில் எழ வைத்து, மேட்சை பார்க்க வைக்கும் அளவிற்கு மும்பை - பெங்களூருக்கு இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. சிஎஸ்கே ஆடும் போட்டிகளை தவிர மற்ற எல்லா போட்டிகளும் ஐபிஎல் தொடரில் பரபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை ஸ்கோர்

எத்தனை ஸ்கோர்

நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் முதலில் 201 ரன்கள் எடுத்தது. ஏ பி டிவில்லியர்ஸ், ஆரோன் பின்ச், தேவ்தத் படிக்கல் என்று பெங்களூரின் டாப் ஆர்டர் வீரர்கள் மூன்று பேரும் அரை சதம் அடித்தனர். இதனால் பெங்களூர் மிக எளிதாக 200 ரன்களை கடந்து.. மும்பைக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது.

இலக்கு

இலக்கு

இந்த இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை தொடக்கத்தில் இருந்து திணறியது. ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என்று வரிசையாக எல்லோரும் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கண்டிப்பாக மும்பை தோல்வி அடைந்துவிடும் என்றுதான் ரோஹித் சர்மாவே நினைத்தார்.

ஆனால் ஷாக்கிங்

ஆனால் ஷாக்கிங்

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பையின் இஷான் கிஷான் - பொல்லார்ட் இணை பெங்களூர் வீரர்களின் பந்துகளை கடைசி ஐந்து ஓவரில் அடித்து துவைத்தது. 58 பந்துகள் பிடித்த இஷான் கிஷான் 9 சிக்ஸ் அடித்தார். 2 பவுண்டரி அடித்தார். மொத்தம் 99 ரன்கள் எடுத்து கடைசியில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பொல்லார்ட் எப்படி

பொல்லார்ட் எப்படி

அதேபோல் கடைசியில் வந்த பொல்லார்ட் வெறும் 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸ் மற்றும் 3 பவுண்டரி அடக்கம். இந்த நிலையில் கடைசியில் மும்பையும் 201 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது. இதன்பின் சூப்பர் ஓவரில் மும்பைதான் முதலில் பேட்டிங் செய்தது. அதற்கு ஒரு பாலுக்கு முன் அவுட்டாகி பெவிலியன் சென்ற இஷான் கிஷான்தான் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் இஷான் கிஸானை ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய அனுப்பவில்லை. மாறாக பொல்லார்ட், பாண்டியா இருவரும் பேட்டிங் வந்தனர். இவர்களால் சூப்பர் ஓவரில் சரியாக ஆட முடியவில்லை. 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே மும்பை எடுத்தது. இதையடுத்து சூப்பர் ஓவரில் பெங்களூர் 8 ரன்கள் எடுத்து வென்றது. இந்த போட்டியில் சூப்பர் ஓவரில் இஷான் கிஷனை இறக்காமல் போனதற்கு ரோஹித் சர்மா முக்கியமான காரணம் ஒன்றை சொல்லி இருக்கிறார்.

காரணம் என்ன

காரணம் என்ன

இது தொடர்பாக ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டியில், இஷான் கிஷனை சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய அனுப்ப முடியவில்லை. அவர் பேட்டிங் செய்து களைத்து போய் இருந்தார். கடுமையான வெப்பநிலை காரணமாக அவரின் உடல் களைத்து போய் இருந்தது. அதிக வியர்வையை இழந்து, மிகவும் அவதிப்பட்டார். வெப்பநிலை மிக அதிகமாக இருந்தது. அவரை அனுப்பலாம் என்று நினைத்தோம். ஆனால் அவரால் முடியவில்லை.

பாண்டியா

பாண்டியா

இதுதான் அவரை இறக்காமல் போனதற்கு காரணம். இதனால் பாண்டியா, பொல்லார்டை அனுப்பினோம். இருவரும் சிக்ஸ் அடிக்க கூடிய திறமை பெற்றவர்கள். ஆனால நேற்று அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இல்லை. நேற்று போட்டி எங்கள் வசம் லேசாக மாறியது பெரிய அளவில் நம்பிக்கையை அளித்தது. இந்த போட்டியில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம் என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, September 29, 2020, 15:10 [IST]
Other articles published on Sep 29, 2020
English summary
IPL 2020: Why Mumbai didn't send Ishan Kishan for super over? explains Rohit Sharma.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X