சந்தேகம்.. சாக்சி எழுதிய உருக்கமான கடிதம்.. தோனி அடுத்தடுத்து செய்த 2 காரியம்.. என்ன செய்ய போகிறார்?

துபாய்: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அடுத்தடுத்து செய்த இரண்டு விஷயங்கள்.. அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற போகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கே திட்டமிட்டபடி செல்லவில்லை. கடந்த முறை பைனல்ஸ் வரை சென்ற சிஎஸ்கே இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்லலாம் என்று திட்டமிட்டு களமிறங்கியது.

ஆனால் சிஎஸ்கே அணிக்கு இந்த தொடர் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. மொத்தம் 11 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்று பிளே ஆப் வாய்ப்பை இந்த முறை இழந்துள்ளது.

கடைசி சீசன்

கடைசி சீசன்

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடரா என்று கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் பேட்டிங் இந்த முறை மோசமாக சொதப்பி உள்ளது. எந்த போட்டியிலும் தோனி அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. இவரின் பேட்டிங்கில் பழைய வேகமும், துல்லியமும் இந்த முறை இல்லை.

பேட்டிங் மோசம்

பேட்டிங் மோசம்

தோனியும் பேட்டிங் செய்ய விருப்பமே இல்லாமல் ஆடியது போல ஆடினார். சரியாக சிக்ஸ் அடிக்க முடியாமல் பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து தோனி அவுட்டான விதம் பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் தோனி ஓய்வு பெற போகிறாரா என்று கேள்விகளை எழுப்பி இருந்தனர். ரசிகர்களும் இதே கேள்வியை எழுப்பி இருந்தனர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில்தான் தோனி கடந்த சில போட்டிகளாக தனது டி ஷர்டை மைதானத்தில் பிற அணி வீரர்களுக்கு வழங்கி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது டி ஷர்டை ஜோஸ் பட்லருக்கு தோனி வழங்கினார். அதன்பின் மும்பைக்கு எதிரான போட்டியில் பாண்டியா பிரதர்சிடம் தோனி தனது டி ஷர்டை வழங்கினார். இதனால் தோனி ஓய்வு பெற போகிறாரா என்று சந்தேகம் எழுந்தது.

கடிதம்

கடிதம்

இந்த நிலையில் இன்று தோனியின் மனைவி சாக்சி எழுதிய கடிதம் இந்த சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது. தோனி விடைபெறுவது போல சாக்சி சூசகமாக கடிதம் எழுதி இருக்கிறார். இது வெறும் விளையாட்டுதான்.. நீங்கள் சில போட்டிகளில் வெற்றிபெறுவீர்கள்.. சில போட்டிகளில் தோல்வி அடைவீர்கள். கடந்த சில வருடங்களாக பெரிய திரில்லிங் வெற்றிகளை பெற்று இருக்கிறோம், சில மோசமான தோல்விகளையும் சுவைத்து இருக்கிறோம்.

இதயம்

இதயம்

சில விஷயங்களை கொண்டாடி இருக்கிறோம், சில விஷயங்கள் இதயத்தை உடைத்து இருக்கிறது. சிலர் வெற்றிபெறுவார்கள், சிலர் தோல்வி அடைவார்கள், சிலர் தவற விடுவார்கள்,.. இது வெறும் விளையாட்டுதான். நிறைய கருத்துக்களும், அறிவுரைகளும் வருகின்றன.ஸ்போர்ஸ்மேன்சிப்பை மதிக்க வேண்டும். இதுவிளையாட்டு என்பதை மறந்து உணர்ச்சிவசப்பட்டு பேச கூடாது. என்று சாக்சி பெரிய லெட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

உணர்ச்சி வேண்டாம்

உணர்ச்சி வேண்டாம்

சிஎஸ்கே தோல்விக்காக இப்படி அவர் எழுதினாரா இல்லை தோனிக்காக இப்படி எழுதினாரா என்று தெரியவில்லை. தோனி தனது டி ஷர்டை பரிசு அளிப்பதும், சாக்சி இப்படி கடிதம் எழுதுவதும் ரசிகர்கள் மத்தியில் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. தோனி ஓய்வு பெறும் திட்டம் எதிலும் இருக்கிறாரா என்று பலர் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Will CSK skipper Dhoni play in the next season?
Story first published: Monday, October 26, 2020, 16:05 [IST]
Other articles published on Oct 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X