For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த உடம்போடு மைதானம் சென்றால்.. முடக்கி போட்ட ஆபரேஷன்.. புலம்பும் பாண்டியா.. கலக்கத்தில் மும்பை!

அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர் பாண்டியா தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறார்.

இந்திய அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா. இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க வாய்ப்புள்ள வீரர்களின் பட்டியலில் இவர் இணைத்துவிட்டார். இந்திய அணியில் மட்டுமன்றி ஐபிஎல் போட்டியிலும் இவர்தான் கிங்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் இவர், அந்த அணியின் இரும்பு பில்லராக உள்ளார். ஆனால் அந்த பில்லர்தான் தற்போது ஆட்டம் கண்டு உள்ளது.

CSK vs MI : தோனியை நம்பும் டாடி ஆர்மி vs துடிப்பான மும்பை இந்தியன்ஸ்.. உச்சகட்ட பரபரப்பு!CSK vs MI : தோனியை நம்பும் டாடி ஆர்மி vs துடிப்பான மும்பை இந்தியன்ஸ்.. உச்சகட்ட பரபரப்பு!

ஏன் இப்படி

ஏன் இப்படி

கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின் அமைதியான வீரர்களில் பாண்டியாவும் ஒருவர். இவர் கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின் பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகளில் நேரடியாக விளையாடவில்லை. அதேபோல் பெரிய அளவில் பயிற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. காரணம், இவர் உடலில் செய்யயப்பட்ட ஆபரேஷன்கள். கடந்த நவம்பர் மாதம் இவருக்கு லண்டனில் ஆபரேஷன் செய்யப்பட்டது. முதுகில் இந்த ஆபரேஷன் செய்யப்பட்டது.

ஏன் ஆபரேஷன்

ஏன் ஆபரேஷன்

முதுகில் சதையில் ஏற்பட்டு இருந்த பாதிப்பு காரணமாக இவருக்கு இந்த ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன் செய்யப்பட்ட பின் இவரால் இரண்டு வாரம் நடக்க கூட முடியவில்லை. வீல் சேரில் அமர்ந்துதான் இவர் சில நாட்கள் காலத்தை கழித்தார். அதன்பின் இவர் ஸ்டிக் பயன்படுத்தி நடந்தார். இவர் முழுமையாக நடக்க ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது.

மிக மோசம்

மிக மோசம்

அதன்பின்பும் கூட அவரால் உடற் பயிற்சி செய்ய முடியவில்லை. மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக இவரால் எடை தூக்க முடியவில்லை. இதனால் இவரின் பார்ம் மோசமாக பாதிக்கப்பட்டது. பிப்ரவரி - மார்ச் மாதம் இவர் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் அப்போதும் கூட, கொரோனா பாதிப்பு காரணமாக இவரால் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.

எப்படி மாறினார்

எப்படி மாறினார்

இதனால் அவரின் பார்ம் மேலும் பாதிக்கப்பட்டது. மொத்தமாக அவர் கிரிக்கெட் பயிற்சி இன்றி பாதிக்கப்பட்டார் . அதன்பின் வரிசையாக மனைவி கர்ப்பம், திருமணம் என்று இவர் பிஸியாகிவிட்டார். இதனால் கடந்த சில மாதங்களாக பாண்டியா சரியாக பயிற்சி எடுக்கவில்லை என்று புகார் வைக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக மட்டுமே இவர் உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு மாதம் மட்டுமே

ஒரு மாதம் மட்டுமே

ஆனால் பெரிய அளவில் பேட்டிங், பவுலிங் பயிற்சி செய்யவில்லை. இதனால் அவரின் ஆட்டம் குறித்து மும்பை அணிக்கு உள்ளேயே பலர் சந்தேகம் எழுப்பி உள்ளதாக கூறுகிறார்கள் . ஆம் மும்பை அணியில் ஆடும் லெவலில் இவரை சேர்க்க சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அணியில் நிறைய ஆல் ரவுண்டர் இருக்கிறார்கள். பயிற்சி ஆட்டங்களில் பார்த்துவிட்டு பாண்டியாவிற்கு வாய்ப்பு கொடுக்கலாம் . இப்போது வேண்டாம் என்று இவர்கள் கூறி வருகிறார்கள் .

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

பாண்டியா இதனால் இன்னொரு பக்கம் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. காயங்கள்தான் என்னை வழி நடத்தி செல்கிறது. நான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்று நம்பிக்கை இருக்கிறது.நான் இப்போது இருக்கும் மன திட்டத்தில் எதையும் சாதிப்பேன். என் மனம் மிக வலிமையாக இருக்கிறது. ஆனால் சில சமயம் நாம் விதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காயம் வரும்

காயம் வரும்

நான் இப்போது இருக்கும் நிலைக்கு மைதானத்திற்கு சென்றால்.. அது வேறு மாதிரி வலிமையை எனக்கு கொடுக்கும். காயங்கள் வரும் போகும். ஆனால் அதில் இருந்து நாம் கடந்து வர வேண்டும். சில விஷயங்களை தவிர்க்க முடியாது. இந்த காயம் காரணமாக நான் சோர்ந்து போகவில்லை. என்னுடைய பலம் அதிகரித்து இருக்கிறது. நான் இன்னும் தீவிரமாக பயிற்சியை மேற்கொள்வேன் என்று பாண்டியா கூறியுள்ளார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் பாண்டியா இவ்வளவு உறுதியாக இருந்தாலும் கூட மும்பை அணி நிர்வாகம் இவர் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கவில்லை. அவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இனிவரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை ஒருத்தே அவரின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்கிறார்கள்.

Story first published: Saturday, September 19, 2020, 13:35 [IST]
Other articles published on Sep 19, 2020
English summary
IPL 2020: Will Hardik Pandya Play in today match against CSK?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X