For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அணிக்குள் வரும் அர்ஜுன்.. சச்சின் வைக்கும் கோரிக்கை.. மும்பையில் நிலவும் பனிப்போர்.. என்ன நடக்கிறது?

சென்னை: சென்னை அணியில் வீரர்கள் பலர் விலகிய காரணத்தாலும், கொரோனாவாலும் குழப்பம் நிலவி வரும் நிலையில், இன்னொரு பக்கம் மும்பைஅணியில் சத்தமே இன்றி பெரிய பிரச்சனை ஒன்று ஓடிக்கொண்டு இருக்கிறது.

சென்னை அணியில் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே நிறைய பிரச்சனைகள் நிலவி வருகிறது. ரெய்னா, ஹர்பஜன் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் திடீர் என்று அணியில் இருந்து விலகி சென்றனர். அதன்பின் வீரர்கள் வரிசையாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்கள்.

வரிசையாக இளம் வீரர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட காரணத்தால் சென்னை அணி தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. ஆனால் சென்னை அணியில் மட்டும்தான் இவ்வளவு பிரச்சனை நிலவுகிறது என்று பார்த்தால் அது உண்மையில்லை.. இன்னொரு பக்கம் மும்பை அணியிலும் பெரிய அளவில் பிரச்சனை ஒன்று நிலவி வருகிறது.

இந்தமுறை வேற மாதிரி இருக்கும்.. தோனி மொத்தமாக மாறிவிட்டார்.. சிஎஸ்கே கோச் உடைத்த செம சீக்ரெட்!இந்தமுறை வேற மாதிரி இருக்கும்.. தோனி மொத்தமாக மாறிவிட்டார்.. சிஎஸ்கே கோச் உடைத்த செம சீக்ரெட்!

மும்பை பனிப்போர்

மும்பை பனிப்போர்

மும்பை அணியில் நீண்ட நாட்களாக ஒரு மும்முனை பனிப்போர் நிலவி வருகிறது என்றுதான் கூற வேண்டும். மும்பையின் அணியின் கோச் மகிளா ஜெயவர்தனேவிற்கும், சச்சின் டெண்டுல்கருக்கும்தான் இந்த பனிப்போர் நிலவி வருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு பெரிதாக இல்லை என்று கூறுகிறார்கள். மும்பை அணியில் சச்சினின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக இணையத்தில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

அணி தேர்வு

அணி தேர்வு

இதற்கு காரணம், 2 வருடம் முன்பு மும்பை அணி, ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை எடுத்த போதே சச்சினுக்கு பிடித்த வீரர்களே அதிகம் அணியில் எடுக்கப்பட்டனர் என்ற புகார் வைக்கப்பட்டது. அதாவது அந்த ஏலத்தில் சச்சினின் ஆதிக்கம் அதிகம் இருந்ததாக புகார் வைக்கப்பட்டது. சச்சின் தனக்கு பிடித்த வீரர்களை அணியில் கொண்டு வர முயன்றார் என்று கூறப்பட்டது .

நன்றாக இருந்தது

நன்றாக இருந்தது

ஆனால் அதன்பின் இரண்டு வருடமாக மும்பை அணியில் பிரச்சனை எதுவும் இல்லை. எல்லாம் சரியாகவே சென்று கொண்டு இருந்தது. அதிலும் மும்பை அணி கடந்த வருடம் கப் அடித்தது. இதனால் அணிக்குள் பெரிய அளவில் பிரச்சனை எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை. ஆனால் அணிக்குள் சின்ன புகைச்சல் இருக்கிறது என்று தகவல்கள் வந்தது. மும்பையில் ஒரே அணிக்கு பல மூத்த வீரர்கள் ஆலோசகர்களாக இருப்பதுதான் பிரச்சனை என்கிறார்கள்.

இப்போது என்ன

இப்போது என்ன

தனியாக மகிளா மட்டும் முடிவுகளை எடுக்க முடியவில்லை. ரோஹித்திற்கும் பெரிய சுதந்திரம் இல்லை. பலர் ஆலோசனை கொடுக்கிறார்கள். இதுதான் அணியின் சிக்கல் என்று கூறப்படுகிறது. அதோடு தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரை அணிக்குள் கொண்டு வர சச்சின் முயன்று வருகிறார். தற்போது மும்பை அணிக்குள் பனிப்போர் விஸ்வரூபம் எடுக்கவும் இதுவே காரணம் என்கிறார்கள். ஆம், இந்த ஐபிஎல் தொடரில் அர்ஜுனை ஆட வைத்து, இந்திய அணிக்குள் அடுத்த வருடம் இவரை கொண்டு வர முயல்கிறார் என்று புகார்கள் வந்துள்ளது.

ஆனால் விரும்பவில்லை

ஆனால் விரும்பவில்லை

ஆனால் ரோஹித்தோ அல்லது ஜெயவர்தனேவோ இதை விரும்பவில்லையாம். அணிக்குள் அனுபவம் இல்லாத இளம் வீரர் ஒருவரை கொண்டு வர இவர்கள் இருவரும் விரும்பவில்லை. ஐபிஎல் என்பது வீரர்களை தேர்வு செய்யும் தொடர் இல்லை. இது franchise போட்டி. இதில் கப் அடிப்பதே முக்கியம். இதில் ரிஸ்க் எடுக்க முடியாது என்று மகிளா, ரோஹித் நினைப்பதாக கூறுகிறார்கள்.

சச்சின் உறுதி

சச்சின் உறுதி

ஆனால் சச்சின் எப்படியாவது, அர்ஜுனை அணிக்குள் கொண்டு வர நினைக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் , இந்திய அணி வீரர்களுக்கு எதிராக ஏற்கனவே பவுலிங் செய்துள்ளார். வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களுடன் கலந்து கொண்ட இவர் பலமுறை அவர்களுக்கு பவுலிங் செய்து பயிற்சி எடுத்துள்ளார். ஏற்கனவே இந்திய பெண்கள் அணிக்கு எதிராக பலமுறை பவுலிங் செய்து பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவுலிங் செய்வார்

பவுலிங் செய்வார்

அப்போதே இது விமர்சனத்திற்கு உள்ளானது. இதெல்லாம் நெப்போட்டிசம். சச்சின் மகன் என்பதால் இப்படி எளிதாக வாய்ப்பு கிடைக்கிறது என்று அப்போதே இந்த விஷயம் சர்ச்சையானது. இந்த நிலையில்தான் அவரை எம்ஐ அணிக்குள் கொண்டு வர சச்சின் அழுத்தம் தருவதாக தகவல் வருகிறது. அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கை விட இவர் சிறப்பாக பவுலிங் செய்யக்கூடியவர். முன்பே இந்திய அணியில் இருக்கும் முன்னணி வீரர்களுக்கு இவர் பவுலிங் செய்துள்ளார். இதில் இவர் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லிக்கும் பவுலிங் வீசியுள்ளார்.

Story first published: Saturday, September 19, 2020, 11:53 [IST]
Other articles published on Sep 19, 2020
English summary
IPL 2020: Will Sachin son Arjun play for MI? What is happening inside the team management?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X