For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வலியில் துடித்தவரை பேட்டிங் அனுப்பியது ஏன்.. பார்க்கவே பரிதாபமாக இருந்தது..நேற்று நடந்த ஷாக் சம்பவம்

துபாய்: நேற்று பெங்களூரு அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடிய போட்டியில் நடந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு இடையே துபாயில் நடந்த போட்டி கடைசி நொடி வரை பரபரப்பாக சென்றது. முதலில் போட்டியில் ஹைதராபாத் அணிதான் வெற்றியை நோக்கி சென்றது. ஆனால் கடைசி நேரத்தில் பெங்களூர் பவுலிங் கை கொடுத்தது.

இந்த போட்டியில் பெங்களூர் 163 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 153 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி அடைந்தது.

யார் இந்த டி நடராஜன்? சேலத்தை சேர்ந்த தமிழக இளைஞர்.. 2 ஆண்டு வலி.. வார்னர் தந்த ஐபிஎல் வாய்ப்பு!யார் இந்த டி நடராஜன்? சேலத்தை சேர்ந்த தமிழக இளைஞர்.. 2 ஆண்டு வலி.. வார்னர் தந்த ஐபிஎல் வாய்ப்பு!

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றுதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் ஆர்பிசி அணி பேட்டிங் செய்த போது ஹைதராபாத் வீரர் மிட்சல் மார்ஸ் காயம் அடைந்தார். அவர் ஐந்தாவது ஓவர் வீசிக்கொண்டு இருந்தார். அப்போது நான்காவது பந்து வீசியவர் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இதனால் அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை விஜய் சங்கர் வீசினார். 28 வயதாகும் மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக மைதானத்தில் கடுமையாக அவதிப்பட்டார். அதன்பின் நடக்கவே முடியாமல் கஷ்டப்பட்டு நடந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றார். அவர் கடுமையான வலியில் துடித்தார்.

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணி

இந்த நிலையில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த போது கடைசி கட்டத்தில், வரிசையாக விக்கெட் விழுந்தது. எல்லா வீரர்களும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கடைசியில் வேறு வழி இல்லாமல், ஹைதராபாத் அணி மீண்டும் மிட்சல் மார்ஷை களத்திற்கு பேட்டிங் செய்ய அனுப்பியது.

மோசம்

மோசம்

ஆனால் களத்திற்கு பேட்டிங் செய்ய வந்த மிட்சல் மிகவும் சிரமப்பட்டார். பேட்டிங் செய்ய முடியாமல் பெரிய அளவில் அவர் கஷ்டப்பட்டார். இவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது என்று ரசிகர்கள் பலர் டிவிட் செய்தனர்.

நடக்க கூட முடியாமல் இருந்தவரை களத்திற்கு அனுப்பியது ஏன் என்று பலரும் நேற்று கேள்வி எழுப்பினார்கள்.

பேட்டிங் செய்தார்

பேட்டிங் செய்தார்

நேற்று பேட்டிங் செய்ய வந்த மிட்சல் மார்ஷ், டக் அவுட்டாகி சென்றதும் குறிப்பிடத்தக்கது. இவர் களமிறங்கியது நேற்று பெரிய சர்ச்சையானது. அவருக்கு காலில் அடிபட்டு உள்ளது. அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. காலில் அவரால் வெயிட் போட முடியாது. அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன், என்று அணியின் கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, September 22, 2020, 11:44 [IST]
Other articles published on Sep 22, 2020
English summary
IPL 2020: With injured leg Mitchell Marsh came to bat yesterday against Bangalore in Dubai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X