For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்

துபாய்: ஐபிஎல் 2021 இரண்டாம் கட்ட தொடரில், மொத்த எத்தனை வீரர்களுக்கு பதிலாக புது வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த முழு தகவலும் வெளியாகியுள்ளது.

Recommended Video

IPL 2021: Points Table நிலவரம்! Playoffs Chance யாருக்கு? | OneIndia Tamil

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர், மீண்டும் நாளை (செப்.19) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

ipl 2021 16 replacement players full list in all franchise

இத்தொடரில் இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில், 27 நாட்களில் அனைத்து போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட உள்ளன. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி தொடரில் 5 டபுள் ஹெட்டர்ஸ் நடந்து முடிந்துவிட்டதால், 2வது பாதி தொடரில் 7 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. நாளை தொடங்கவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், வெவ்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு அணிகளில் இருந்தும் சில வீரர்கள் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். அதில், யார் யார் எந்தெந்த அணியில் இருந்து விலகியுள்ளனர்? அவர்களுக்கு பதில் புதிதாக எந்தெந்த வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர்? என்பது குறித்து பார்க்கலாம்.

பிட்ச் வைத்த பிட்ச் வைத்த "ட்விஸ்ட்".. சிஎஸ்கே நம்பியிருக்கும் ஒரே ஆயுதம் - "டபுள் டக்கர்" பலத்துடன் மும்பை ரெடி!

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பாவிற்கு பதிலாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை அணியில் சேர்த்துள்ளது. வனிந்து ஹசரங்கா இந்திய அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் வியக்கத்தக்க வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் மொத்தம் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக மூன்றாவது டி20 போட்டியில் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இவர் ஒரு ஆல் ரவுண்டர் என்பது கூடுதல் ப்ளஸ். இவரைப் போன்று பல வீரர்கள் ஒவ்வொரு அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் முழு லிஸ்ட் இங்கே,

  • (வெளியேறிய வீரர்) எம் சித்தார்த் (டெல்லி) - புதிதாக இணைந்த வீரர் (குல்வந்த் கெஜ்ரோலியா)
  • க்றிஸ் வோக்ஸ் (டெல்லி) - பென் ட்வார்ஷுய்ஸ்
  • மோஷின் கான் (மும்பை) - ரூஷ் கலாரியா
  • ரிலே மெரிடித் (பஞ்சாப்) - நாதன் எலிஸ்
  • ஜை ரிச்சர்ட்சன் (பஞ்சாப்) - அடில ரஷீத்
  • டேவிட் மலன் (பஞ்சாப்) - எய்டன் மார்க்ரம்
  • ஆண்ட்ரூ டை (ராஜஸ்தான்) - தப்ரைஸ் ஷம்ஸி
  • ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்) - க்ளென் ஃபிலிப்ஸ்
  • பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான்) - ஒஷானே தாமஸ்
  • ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான்) - எவின் லெவிஸ்
  • ஆடம் ஜம்பா (ஆர்சிபி) - வனிந்து ஹஸரங்கா
  • டேனியல் சாம்ஸ் (ஆர்சிபி) - துஷ்மந்தா சமீரா
  • கேன் ரிச்சர்ட்சன் (ஆர்சிபி) - ஜார்ஜ் கேர்டன்
  • ஃபின் ஆலன் (ஆர்சிபி) - டிம் டேவிட்
  • வாஷிங்டன் சுந்தர் (ஆர்சிபி) - ஆகாஷ் தீப்
  • ஜானி பேர்ஸ்டோ (எஸ்ஆர்ஹெச்) - ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு
Story first published: Saturday, September 18, 2021, 22:20 [IST]
Other articles published on Sep 18, 2021
English summary
ipl 2021 16 replacement players full list franchise - ஐபிஎல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X