For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சபாஷ் சரியான போட்டி.. ஐபிஎல்-ன் முதல் டபுள் ஹெட்டர்ஸ்.. அதிரடி மாற்றத்தோடு மோதும் டெல்லி - ராஜஸ்தான்

அபுதாபி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 36வது லீக் ஆட்டமான இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5வது இடத்திலும் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

முதல் பந்திலேயே கெத்து காட்டிய கார்த்திக் தியாகி.. 18 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது டெல்லி!முதல் பந்திலேயே கெத்து காட்டிய கார்த்திக் தியாகி.. 18 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது டெல்லி!

டெல்லி அணி மாற்றங்கள்

டெல்லி அணி மாற்றங்கள்

டெல்லி கேப்பிடல்ஸை பொறுத்தவரை சிறப்பாக விளையாடி வருகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே டெல்லி அணி அதிரடி காட்டி வருவதால் மிகவும் வலுவாக உள்ளது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தை பிடித்துவிடும். அதற்காக டெல்லி அணி ஒரே ஒரு மாற்றத்தை செய்துள்ளது. அதாவது மார்கஸ் ஸ்டோய்னிஸுக்கு பதிலாக லலித் யாதவை கொண்டு வந்துள்ளனர்.

டெல்லி ப்ளேயிங் 11

டெல்லி ப்ளேயிங் 11

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், லலித் யாதவ், சிம்ரன் ஹெட்மெயர், அக்‌ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிஸ்கோ ரபாடா, ஆன்ரிச் நார்ட்ஜே, ஆவேஷ் கான்

பவுலிங் மாற்றம்

பவுலிங் மாற்றம்

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த போட்டியில் தோல்வியின் விளிம்பிற்கு சென்ற அந்த அணி கார்த்திக் தியாகியால் வெற்றியடைந்தது. எனவே வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றுவிட்டால் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி 4வது இடத்தை பிடித்துவிடும். இதற்காக அணியில் 2 மாற்றங்களை ராஜ்ஸ்தான் செய்துள்ளது.

கம்பேக் கொடுத்த மில்லர்

கம்பேக் கொடுத்த மில்லர்

கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சீனியர் வீரர் கிறிஸ் மோரிஸ் வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக டாப்ரைஸ் சாம்சி கொண்டு வரப்பட்டுள்ளார். அதே போல பேட்டிங்கில் தொடக்க வீரர் எவின் லீவிஸ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக டேவிட் மில்லர் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், மஹிபால் லாம்ரார், ரியான் பராக், ராகுல் தேவட்டியா, கார்த்திக் தியாகி, சேட்டன் சகாரியா, முஸ்திவிசூர் ரஹ்மான், டப்ராஸ் சாம்சி

Story first published: Saturday, September 25, 2021, 19:07 [IST]
Other articles published on Sep 25, 2021
English summary
IPL 2021 UAE Leg's 1st Double headers is started, Rajasthan won the toss against DC
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X