3 பக்கமும் கேட்.. வெறும் 24 மணி நேரம்தான் இருக்கும்.. சிக்கலில் ஆர்சிபி.. என்ன செய்ய போகிறார் கோலி!

சென்னை: இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல 3 தவறுகளை நிச்சயம் சரி செய்துகொள்ள வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது முதல் போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது.

கடந்த முறை ப்ளே ஆஃப் வரை சென்ற போதும், ஐதரபாத் அணியால் தோற்கடிக்ப்பட்டு வெளியேறியது. இந்நிலையில் இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் 3 தவறுகளை சரி செய்துகொள்ள வேண்டும்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி அணி ஒரு போட்டியில் தோற்றுவிட்டால், அதற்கு அடுத்த போட்டியில் உடனடியாக ப்ளேயிங் 11ல் மாற்றம் கொண்டு வருகிறது. வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மேலே அவர்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே இந்த முறை எதேனும் போட்டியில் தோல்வி அடைந்தால் ப்ளேயிங் 11ல் மாற்றம் கொண்டு வராமல் இருக்க வேண்டும். இதனை செய்தால் வீரர்களுக்கு தன்னம்பிக்கை வந்து கோப்பை வெல்ல வாய்ப்புள்ளது.

தூண்கள்

தூண்கள்

ஆர்சிபி அணியின் தூண்களாக விராட் கோலி, டிவில்லியர்ஸ் திகழ்கின்றனர்.

ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் மட்டுமே பொறுப்பை சுமக்கிறார்கள். இந்த ஜோடியை வைத்தே அணியின் மொத்த பேட்டிங் வரிசையும் உள்ளது. எனவே இந்த முறை மற்ற வீரர்களும் பொறுப்பு எடுத்துக்கொண்டு ஆட வேண்டும். இந்தாண்டு ஏலத்தில் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், டான் கிறிஸ்டியன் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். எனவே அணியின் பொறுப்புகளை முடிந்தவரை அவர்கள் சுமக்க வேண்டும்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

ஆர்சிபி அணியில் இதுவரை பந்துவீச்சு படை அவ்வளவு பெரிதாக அமையவில்லை. இதனால் அந்த அணி 200+ ரன்கள் இலக்கு நிர்ணயித்த போதும் பவுலர்களால் சமாளிக்க முடியவில்லை. ஸ்பின் பவுலர்களில் சஹால், வாசிங்டன் சுந்தர், சாம்பா, மேக்ஸ்வெல் என சரியாக உள்ளது. ஆனால் வேகப்பந்துவீச்சில் அனுபவமிக்க பல வீரர்களை இந்தாண்டு அந்த அணி கழட்டிவிட்டது. குறிப்பாக கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெயின், உமேஷ் யாதவ் ஆகியோர் கழட்டிவிடப்பட்டனர்.

அவர்களுக்கு பதிலாக இந்த முறை டேனியல் சாம்ஸ், கெயில் சேமிசன், டேன் கிறிஸ்டியன் மற்றும் கேன் ரிச்சர்ட்ஸ்ன் போன்ற இந்தியாவில் ஆடி அனுபவம் இல்லாத வீரர்களை எடுத்துள்ளது. இந்திய பவுலர்கள் என்று பார்த்தால் முகமது சிராஜ், நவ்தீப் சைனி மட்டுமே உள்ளனர். எனவே அவர்கள் சரியான பவுலிங் கூட்டணியை அமைக்க வேண்டும்.

கட்டாயம்

கட்டாயம்

விராட் கோலியின் தலைமையில் ஆடி வரும் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தையே கொடுக்கிறது. ஏனென்றால் பல சிறந்த வீரர்களை அந்த அணி வைத்திருந்த போதும் கோப்பையை வெல்லவில்லை. எனவே இந்த முறை சாம்பியன் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
3 Blunders that RCB should avoid to win the trophy in IPL 2021
Story first published: Thursday, April 8, 2021, 16:19 [IST]
Other articles published on Apr 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X