For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குழப்பத்தில் விராட் கோலி.தேவ்தத் பட்டிக்கலின் இடத்தை நிரப்ப வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள்.பலம் என்ன?

சென்னை: விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு அணி இந்தாண்டு ஓப்பனிங் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் ஏப்.9ம் தேதி எதிர்கொள்கிறது.

யாராலயும் அடிச்சுக்க முடியாது... அடிச்சுக்க முடியாது... சிஎஸ்கே பத்தி சொல்லியிருக்காரு ஹஸ்ஸி யாராலயும் அடிச்சுக்க முடியாது... அடிச்சுக்க முடியாது... சிஎஸ்கே பத்தி சொல்லியிருக்காரு ஹஸ்ஸி

இந்நிலையில் பெங்களூரு அணியில் தேவ்தத் பட்டிகல்லுக்கு பதிலாக கோலியுடன் ஓப்பனிங் ஆட 3 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முகமது அசாருதீன்

முகமது அசாருதீன்

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்காக கேரளாவை சேர்ந்த முகமது அசரூதின் முதன் முதலாக பெங்களுரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரை ஆரம்ப தொகையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது ஆர்.சி.பி. சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டக் அலி கோப்பையில் அவரின் ஆட்டம் அனைவராலும் பேசப்பட்டது. மொத்தம் ஆடிய 5 போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிறங்கிய அவர், 214 ரன்கள் எடுத்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 194.5 ஆகும். குறிப்பாக இந்த தொடரில் அவர் 54 பந்துகளில் 137 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் பெற்றார். எனவே இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

 ஃபின்

ஃபின்

நியூசிலாந்து வீரரான ஆலன் ஃபின், சமீபத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்களை அடித்து அசரடித்தார். இந்த போட்டியில் அவர் 18 பந்துகளில் தந்து முதல் அரைசதத்தை பதிவு செய்தார். தற்போது அதிரடி ஃபார்மில் இருக்கும் இவரை தொடக்க வீரராக களமிறக்கினால் பின்னர் வரும் மேக்ஸ்வேல், டிவில்லியர்ஸ் போன்றோர் அணியின் ஸ்கோரை உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள்.

ராஜத்

ராஜத்

ஆர்.பி.சி அணி இந்த முறை கோப்பையை வெல்ல முக்கிய துருப்பு சீட்டாக இருக்கப்போவது இருக்க போகும் வீரர் என மைக் ஹசனால் பாராட்டப்பட்டவர் ராஜத் படிடார். சமீபத்தில் சையது முஷ்டக் அலி கோப்பையில் 29 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். அதே போல தற்போது ஐபிஎல் பயிற்சி ஆட்டத்தின் போதும் 34 பந்துகளில் 55 ரன்களை விளாசியுள்ளார். எனவே தேவ்தத் பட்டிக்கல்லுக்கு மாற்று வீரராக இவர் இருப்பார் பலரும் கூறுகின்றனர்.

 கட்டாயம்

கட்டாயம்

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல்-ல் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. கடந்த ஆண்டு சிறப்பாக ஆடி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய போதும் இறுதிப்போக்கு தகுதி பெறவில்லை. எனவே இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

Story first published: Sunday, April 4, 2021, 13:10 [IST]
Other articles published on Apr 4, 2021
English summary
3 Players who can replace Devdutt Padikkal in RCB in IPL 2021!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X