For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ப்ளேயிங் 11ல் சிக்கல்...ரோகித் முன் இருக்கும் 3 முக்கிய கேள்விகள்? ஆர்.சி.பி-ஐ வெல்லுமா மும்பை அணி

சென்னை: ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் மும்பை அணியின் ப்ளேயிங் 11ல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் வரும் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஹசல்வுட்டுக்கு மாற்றாக பேட்ஸ்மேனே தேவை...ஃபார்மில் இருக்கும் 3 வீரர்கள்.. டார்கெட் செய்யுமா சிஎஸ்கே ஹசல்வுட்டுக்கு மாற்றாக பேட்ஸ்மேனே தேவை...ஃபார்மில் இருக்கும் 3 வீரர்கள்.. டார்கெட் செய்யுமா சிஎஸ்கே

இதற்காக சென்னை வந்து சேர்ந்துள்ள மும்பை அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை அணியின் வீரர்கள் தேர்வில் கேப்டன் ரோகித்திற்கு முன்னாள் 3 கேள்விகள் உள்ளன.

முதல் கேள்வி என்ன?

முதல் கேள்வி என்ன?

அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த முறையும் ஓப்பனிங் இறங்குவார். ஆனால் மறுமுனையில் வழக்கமாக ஆடும் குயிண்டன் டிக்காக் பாகிஸ்தான் தொடரில் இருப்பதால் மும்பை அணியின் முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார். அணியில் மீதம் கிறிஸ் லின் மற்றும் இஷான் கிஷான் உள்ளனர். கிறிஸ் லின் கடந்த தொடர்களில் பெரியளவில் சோபிக்கவில்லை. இஷான் கிஷான் இங்கிலாந்து தொடரில் அதிரடி காட்டினார். எனவே யாருக்கு ஓப்பனிங் வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரோகித்திற்கு 2வது கேள்வி

ரோகித்திற்கு 2வது கேள்வி

சென்னை முதல் 5 போட்டிகளை ஆடும் மும்பை அணியில் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா சுழற்பந்துவீச்சுக்கும் உதவியாக இருப்பதால் ப்ளேயிங் 11ல் அவரது இடம் உறுதியாகவுள்ளது. ஆனால் மற்றொரு ஸ்பின்னராக பியூஸ் சாவ்லா இருப்பாரா? ராகுல் சஹார் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தாண்டு மும்பை அணியால் ரூ.2.4 கோடிக்கு வாங்கப்பட்ட பியூஸ் சாவ்லா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அதே வேளையில் ராகுல் சஹார் மும்பை அணிக்கு சிறப்பாக பந்துவீசியுள்ளார். இதனால் இவர்கள் இருவரில் ரோகித் யாரை தேர்வு செய்வார்?

 3வது கேள்வி என்ன?

3வது கேள்வி என்ன?

மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் தவிர்கமுடியாத வேகப்பந்துவீச்சாளர்களாக உள்ளனர். எனவே அணிக்கு 3வது பவுலராக யார் இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அணியில் மீதம் நாதன் கோல்டர் நைல், ஜிம்மி நீசம், தவால் குல்கர்ணி, ஆடம் மைல்ன், மார்கோ ஜென்சன் உள்ளனர். இவர்களில் மைல்ன் கடந்த வங்கதேச தொடரில் சிறப்பாக பந்துவீசினார். அதே போல கோல்டர் நைலும் பிக் பாஷ் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே இவர்களில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என ரோகித்தின் முன் கேள்வி உள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஐபிஎல்-ல் இதுவரை 5 முறை கோப்பையை வென்று அசுர பலத்துடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை தொடக்கம் முதலே அதிரடி காட்டி கோப்பை வென்றது. எனவே இந்த முறையும் தொடக்க போட்டியில் கோலியின் பெங்களூரு அணியை வீழ்த்தி ஆரம்பம் முதலே அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 3, 2021, 21:35 [IST]
Other articles published on Apr 3, 2021
English summary
3 questions in front of Rohit Sharma before MI vs RCB’s First match in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X