For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘கடவுளே ராஜஸ்தான் தோக்கனும்’.. முக்கிய பிரார்த்தனையில் 3 அணிகள்.. கருணை காட்டுமா டெல்லி கேப்பிடல்ஸ்

அபுதாபி: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வெற்றிக்காக மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் சைலண்டாக வேண்டி வருகின்றன.

ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் டெல்லி அணி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான அணி பந்துவீச்சை தேர்வு செய்து சிறப்பாக விளையாடி வருகிறது.

சபாஷ் சரியான போட்டி.. ஐபிஎல்-ன் முதல் டபுள் ஹெட்டர்ஸ்.. அதிரடி மாற்றத்தோடு மோதும் டெல்லி - ராஜஸ்தான் சபாஷ் சரியான போட்டி.. ஐபிஎல்-ன் முதல் டபுள் ஹெட்டர்ஸ்.. அதிரடி மாற்றத்தோடு மோதும் டெல்லி - ராஜஸ்தான்

திணறி வரும் டெல்லி

திணறி வரும் டெல்லி

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி பேட்ஸ்மேன்கள், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். கடந்த போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கார்த்தி தியாகி தான் வீசிய முதல் ஓவரிலேயே போல்ட் அவுட் எடுத்தார். இதே போல மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷாவும் 10 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் டெல்லி அணி 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் டெல்லி அணி சற்று திணறி வருகிறது.

3 அணிகள் பிரார்த்தனை

3 அணிகள் பிரார்த்தனை

இந்நிலையில் டெல்லி அணி எப்படியாவது மீண்டும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என மும்பை, கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். டெல்லி அணி வெற்றி பெறுவது அந்த 2 அணிகளுக்கும் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி முன்னேறி வருவது தான் இதற்கு காரணம்.

எப்படி?

எப்படி?

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுவிட்டால், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருந்து நேரடியாக 3வது இடத்திற்கு முன்னேறும். இந்த பட்டியலில் ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 வெற்றிகளுடன் 3வது இடத்திலும், கொல்கத்தா அணி 4 வெற்றிகளுடன் 4வது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் அணியும் 4 வெற்றிகளை பெற்றுள்ளது. எனினும் ரன் ரேட் அடிப்படையில் 5வது இடத்தில் நீடிக்கிறது.

மும்பை அணிக்கும் பிரச்னை

மும்பை அணிக்கும் பிரச்னை

எனவே ராஜஸ்தான் அணி வென்றுவிட்டால் ஆர்சிபி அணி மற்றும் கொல்கத்தா அணிகள் பின்னுக்கு தள்ளப்படும். ப்ளே ஆஃப் வாய்ப்புகளும் கேள்விக்குறியாகும். இதே போல மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிக்கல் உள்ளது. தற்போது 4 வெற்றிகளுடன் உள்ள மும்பை அணி 6வது இடத்தில் உள்ளது. ஒருவேளை ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுவிட்டால் அதன்பிறகு மும்பை அணி டாப் 4 இடத்திற்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுவிடும்.

Story first published: Saturday, September 25, 2021, 19:06 [IST]
Other articles published on Sep 25, 2021
English summary
3 teams silently cheering for Delhi Capitals.. Prays for RR defeat in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X