For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார் எடுத்த முடிவு இது.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.. 3 ஐபிஎல் அணிகளுக்கு வைக்கப்பட்ட செம செக்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் தங்கள் ஹோம் மைதானத்தை இழக்கிறது.

2021 ஐபிஎல் தொடர் நடக்க இடங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பிபின் சிங் ஹாட்-ட்ரிக்... 6 கோல் அடித்து வெற்றி பெற்ற மும்பை சிட்டி எப்சி.. மிகச்சிறப்பு! பிபின் சிங் ஹாட்-ட்ரிக்... 6 கோல் அடித்து வெற்றி பெற்ற மும்பை சிட்டி எப்சி.. மிகச்சிறப்பு!

முதலில் இந்த 2021 ஐபிஎல் தொடர் மும்பை, புனே, அகமதாபாத் மைதானங்களில் மட்டும் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மீட்டிங்கிற்கு பின் இதில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

மும்பை

மும்பை

அதன்படி மும்பை, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் , டெல்லி, பெங்களூர் ஆகிய மைதானங்களில் இந்த முறை ஐபிஎல் நடக்க உள்ளது. மும்பை அணி கொடுத்த அழுத்தம் காரணமாக மும்பையில் ஆட்டம் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 ஆனால்

ஆனால்

இதனால் மும்பை அணி இந்த முறை புதிய ஹோம் மைதானத்தை தேட வேண்டிய அவசியம் இல்லை. இது மும்பை அணிக்கு ஆதரவாக மாறியுள்ளது. ஆனால் இந்த முறை 2021 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் தங்கள் ஹோம் மைதானத்தை இழக்கிறது.

 சிக்கல்

சிக்கல்

அதன்படி இந்த அணிகள் அகமதாபாத் உள்ளிட்ட மற்ற மைதானங்களில் ஆடும். இந்த அணிகளுக்கு ஹோம் மைதானம் இருக்காது. இது அந்த அணிகளுக்கு பெரிய பின்னடைவை கொடுக்கும் என்பது குறிப்பிடதக்கது. இந்த அணிகள் எங்கு ஆடும் என்பது உறுதியாகவில்லை.

ஹைதராபாத்

ஹைதராபாத்

சென்னை, பெங்களூரில் ஆட்டங்கள் நடக்கும் போது அருகில் இருக்கும் ஹைதராபாத்தில் ஆட்டங்கள் நடக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த முடிவை யார் எடுத்தது என்று விவாதம் எழுந்துள்ளது. இந்த 3 அணிகளின் ஐபிஎல் ரசிகர்கள் இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

Story first published: Sunday, February 28, 2021, 13:48 [IST]
Other articles published on Feb 28, 2021
English summary
IPL 2021: 3 Teams will lose their home ground as BCCI declares 6 cities as the venue in the meeting.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X