For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தலாம்.. சில மாற்றங்கள் போதும்.. கோலிக்கு முன் இருக்கும் 5 முக்கிய சிக்கல்கள்

சார்ஜா: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று கம்பேக் கொடுக்க வேண்டும் என்றால் ஆர்சிபி அணிக்கு 5 சிக்கல்கள் உள்ளன.

Recommended Video

IPL 2021: CSK vs RCB Predictable Playing 11 | Match 35 | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இரு பெரும் அணிகளான சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி சார்ஜாவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளன.

3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது! 3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!

இந்த போட்டியில் இரு அணிகளுமே டாப் 3 இடங்களில் உள்ள போதும், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு காரணம் அந்த அணியில் இருக்கும் 5 சிக்கல் தான்.

செட்டாகாத ப்ளேயிங் 11

செட்டாகாத ப்ளேயிங் 11

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் ஆர்சிபி அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் மிகச்சிறப்பாக இருந்தது. ப்ளேயிங் 11ல் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வராமல் வெற்றி நடை போட்டது. ஆனால் 2வது பகுதி ஆட்டத்தில் ஆடம் சாம்பா உள்ளிட்ட அணியின் 4 முக்கிய அயல்நாட்டு வீரர்கள் பங்குபெறவில்லை. நட்சத்திர வீரர் வாஷிங்டன் சுந்தரும் காயம் காரணமாக வெளியேறிவிட்டார். இது ஒருபுறம் இருக்க அணியின் தலைமை பயிற்சியாளர் சிமோன் கடிச்சும் வெளியேறி தற்போது புதிய பயிற்சியாளராக மைக் ஹெசன் செயல்படுகிறார். இவ்வளவு அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், இந்த ப்ளேயிங் 11 செட் ஆவதற்கு இன்னும் நாட்கள் தேவை.

ஓய்வு அறை

ஓய்வு அறை

2வது பகுதி ஆட்டத்தில் ஆர்சிபி அணி முழுவதுமாக நம்பிக்கை இழந்து சோர்வாக உள்ளது என்றே கூறலாம். இதற்கு காரணம் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தது தான். ஓய்வு அறையில் வழக்கமாக மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய வீரர்கள் கோலியின் மன அழுத்தத்தால் சற்று சோகத்தில் இருப்பதாக தெரிகிறது. இதனை கோலி மாற்றி அமைக்க வேண்டும்.

விராட் கோலி ஃபார்ம்

விராட் கோலி ஃபார்ம்

ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், ஒரு பேட்ஸ்மேனாகவும் விராட் கோலியின் ஃபார்ம் மோசமான நிலையில் உள்ளது. முதல் பகுதி ஆட்டத்தில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். 2வது பகுதியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பந்தை மீட் செய்வதற்கே திணறினார். எனவே ஓப்பனிங்கில் களமிறங்கும் கோலி நம்பிக்கையுடன் விளையாடினால் தான் பின் வரிசை வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

மோசமான பேட்டிங் ஆர்டர்

மோசமான பேட்டிங் ஆர்டர்

ஆர்சிபி அணியின் பேட்டிங்கானது கேப்டன் கோலி, தேவ்தத் பட்டிக்கல், மேக்ஸ்வெல், ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகிய 4 பேரை மட்டுமே நம்பியுள்ளது. இவர்களுக்கு பின்னர் ஆழமான பேட்டிங் படை அந்த அணியில் இல்லை. எனவே இவர்களில் 2 வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தால் கூட, அதனை தொடர்ந்து எடுத்து செல்ல ஆர்சிபி அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புகின்றனர். இதனை கோலி சரி செய்ய வேண்டும்.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

ஆர்சிபி அணியில் கோலிக்கு மிகவும் பலமாக பார்க்கப்பட்டதே யுவேந்திர சஹால் தான். ஐபிஎல் தொடரில் விக்கெட் மழை பொழிந்து வந்த யுவேந்திர சஹால் தற்போது ஃபார்ம் அவுட்டாகியுள்ளார். முன்பு அவருடன் ஆடம் சாம்பா உறுதுணையாக இருந்தார். ஆனால் தற்போது இலங்கை வீரர் ஹசரங்கா சேர்ந்திருப்பதால், இந்த ஜோடி இணைந்து பணியாற்ற சிறிது காலம் தேவைப்படுகிறது.

Story first published: Friday, September 24, 2021, 19:29 [IST]
Other articles published on Sep 24, 2021
English summary
5 Important challanges in front of RCB Captain virat kohli to Beat CSK in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X