For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாதில ஓடினால் நியாயமா? பார்க்கவே பரிதாபமா இருக்கு.. வருத்தப்பட்டு புலம்பிய அப்ரிடி.. காரணம் இந்தியா!

இஸ்லாமாபாத்: ஐபிஎல் 2021 தொடர் நடக்க உள்ள நிலையில், இந்த தொடர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி புகார் வைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் சமீபத்தில் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது.

மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவின் முக்கிய வீரர்கள் யாரும் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. பலர் இந்த தொடரில் இருந்து பாதியில் வெளியேறினார்கள்.

பாதியில்

பாதியில்

ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்று தென்னாப்பிரிக்க வீரர்கள் பலர் பாகிஸ்தான் தொடரில் பாதியில் வெளியேறினார்கள். இதனால் தென்னாப்பிரிக்க அணி பல ஏ வீரர்களை வைத்துத்தான் தொடரில் விளையாடியது. இதனால் பாகிஸ்தானும் எளிதாக வென்றது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் பாகிஸ்தானின் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் பாதியில் வெளியேறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி இதை விமர்சனம் செய்துள்ளார். அதில், பாகிஸ்தானில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் பாதியில் வெளியேறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பரிதாபம்

பரிதாபம்

லீக் போட்டி ஒன்றில் விளையாடுவதற்காக சர்வதேச போட்டியில் இருந்து அவர்கள் வெளியேறி உள்ளார்கள்.இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற முடிவுகளை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்று அப்ரிடி மிகவும் வருத்தப்பட்டு புலம்பி உள்ளார்.

பதிலடி

பதிலடி

இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்லில் ஆட அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் ஒப்பந்தத்தின்படி அவர்கள் இந்தியா சென்றுதான் ஆகவேண்டும். இதிலென்ன தவறு என்று கேட்டுள்ளனர்.

Story first published: Thursday, April 8, 2021, 14:54 [IST]
Other articles published on Apr 8, 2021
English summary
IPL 2021: Shahid Afridi feels not so good about SA players leaving to IPL mid of Pak series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X