"எல்லாம் திமிரு".. சொந்த அணி வீரரையே குழிக்குள் தள்ளிவிட்ட பாண்டிங்.. அப்ப ஐபிஎல்லிலும் கதை க்ளோசா?

சென்னை: டெல்லி அணியின் இளம் வீரர் குறித்து பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்த சில விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா. இவர் இந்திய அணிக்கு எதிர்காலத்தில் மிக சிறந்த வீரராக வருவார் என்று கணிக்கப்பட்டது.

தொடக்க காலத்தில் இவர் ஆடிய சர்வதேச போட்டிகளில் கவனம் ஈர்த்தார். அதன்பின் பார்மை இழந்த ப்ரித்வி ஷா கடந்த 2 வருடமாக எந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தும் சரியாக நம்பிக்கை அளிக்கவில்லை. பல போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் இந்திய அணியில் இருந்தே மொத்தமாக ஓரம்கட்டப்பட்டார்.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் டெல்லி அணியில் ஆடும் ப்ரித்வி ஷா குறித்து அவரின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் புகார் அளித்துள்ளார். அதில், ப்ரித்வி ஷா சமயங்களில் பேட்டிங் பயிற்சி செய்ய கூப்பிட்டால் வர மாட்டார். அவர் நன்றாக ஆடினாலும் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்வார். வலைப்பயிற்சியில் ஈடுபடுவார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அவர் நன்றாக ஆடாத நாட்களில் ஒரு நிமிடம் கூட வலைப்பயிற்சியில் ஈடுபடமாட்டார். கடந்த சீசனில் ப்ரித்வி ஷா பார்மில் இல்லை. அப்போது அவரை பேட்டிங் பயிற்சி செய்ய அழைத்தும் கூட அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. நான் கூப்பிட்டும் அவர் வரவில்லை, என்று ரிக்கி பாண்டிங் புகார் அளித்துள்ளார்.

திமிர்

திமிர்

ப்ரித்வி ஷா சமயங்களில் திமிராக செயல்படுவார், சரியாக பயிற்சி செய்ய மாட்டார் என்று ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் பாண்டிங்கும் இந்த புகாரை உறுதி செய்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் ப்ரித்வி ஷா கடைசி போட்டிகளில் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த சீசனில் அந்த அணியில் ஸ்மித் எடுக்கப்பட்டுள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

ஏற்கனவே தவான், ரஹானே அணியில் உள்ளனர். இதனால் ப்ரித்வி ஷாவிற்கு இந்த சீசனிலும் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். மொத்தமாக இவரின் ஐபிஎல் எதிர்காலமே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. அதே சமயம் இளம் வீரர் ப்ரித்வி ஷா குறித்து ரிக்கி பாண்டிங் இப்படி பொதுவில் புகார் வைத்திருக்க கூடாது, அது மிகவும் தவறு என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: All is not well between Prithvi Shaw and Ricky Ponting in Delhi capitals team.
Story first published: Thursday, April 8, 2021, 10:10 [IST]
Other articles published on Apr 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X