For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தா அணி தப்பிக்க முடியாது.. அவங்க 3 பேரு ரொம்ப டேஞ்சர்.. எச்சரிக்கை விடுத்த முன்னாள் வீரர்!

சென்னை: இன்றைய போட்டியில் 3 வீரர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என முன்னாள் வீரர் நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

KKRக்கு சின்ன விசில் அடிங்க - Dinesh karthik அன்பான வேண்டுகோள் |Oneindia Tamil

ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் இன்று ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி இன்றிரவு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தோனிதான் அதுக்கு சிறப்பான உதாரணம்... உத்வேகமும் அவருதான்... ஜோஸ் பட்லர் பாராட்டியிருக்காரு! தோனிதான் அதுக்கு சிறப்பான உதாரணம்... உத்வேகமும் அவருதான்... ஜோஸ் பட்லர் பாராட்டியிருக்காரு!

இங்கு ஏற்கனவே ஒரு போட்டி நடைபெற்றுள்ளதால் அதனை வைத்து முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்கள் யார் என நெஹ்ரா கணித்துள்ளார்.

3வது போட்டி

3வது போட்டி

ஐபிஎல் தொடரில் இதுவரை 2 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இதுவரை 2 முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா அணியை 1 முறை கோப்பையை வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி பேட்டிங்கில் பலம்வாய்ந்த ஒன்று. சன் ரைசர்ஸ் அணி பந்துவீச்சுக்கு மிக பலம்வாய்ந்த அணியாகும். இதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பிட்ச் நிலை

பிட்ச் நிலை

இதுகுறித்து பேசிய அவர், சென்னையில் ஏற்கனவே நடைபெற்ற மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியை பார்த்தேன். அதில் ஈரப்பதமான பிட்ச் உள்ளதால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவுகிறது. அதே போல முதல் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் கெயில் ஜேமிசன், டேனியல் கிறிஸ்டியன், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் ஈரமான பிட்ச்சில் ஸ்லோ பந்துகளை போட்டு அசத்தினர்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

எனவே இன்றைய போட்டியில் அனுபவ வீரர்களான புவனேஷ்வர் குமார், டி.நடராஜன் ஆகியோர் ஈரப்பதமான களத்திலும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அதே போல ஒருவேளை பிட்ச் ஈரப்பதமாக இல்லையென்றால் கொல்கத்தா அணிக்கு ரஷித் கான் பெரும் அச்சுறுத்தல் கொடுப்பார் என தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு

கடந்தாண்டு

ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமார் 3 முறை தொடர்ச்சியாக அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரஷித் கான் கடந்த சீசனில் அதிக விக்கெட் எடுத்த 6 வீரராக இருந்தார். இதே போல யார்க்கர் நடராஜன் கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு 14 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.

Story first published: Sunday, April 11, 2021, 19:11 [IST]
Other articles published on Apr 11, 2021
English summary
Ashish Nehra lists SRH's strengths against Kolkatta knight riders for Today's match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X