For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெல்லி அணி செய்த முக்கிய தவறு.. ஆட்டமே மாறியிருக்கும்.. பண்ட் கேப்டன்சி மீது முன்னாள் வீரர் குறை

மும்பை: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பண்ட் ஒரு விஷயத்தை மட்டும் செய்திருந்தால் டெல்லி அணி வென்றிருக்கும் என முன்னாள் வீரர் அஷிச் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Pantன் Run Out! Bihu Dance ஆடிய Riyan Pirag | OneIndia Tamil | OneIndia Tamil Cricket

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது மூத்த வீரர் அஸ்வினை, அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நம்பாதது பேசுப்பொருளாகியுள்ளது.

இஷாந்த் சர்மாவுக்கு காயம்... அவரோட இடத்தை ஆவேஷ் கான் கப்புன்னு புடிச்சுக்கிட்டாரு... பாண்டிங் பரபர!இஷாந்த் சர்மாவுக்கு காயம்... அவரோட இடத்தை ஆவேஷ் கான் கப்புன்னு புடிச்சுக்கிட்டாரு... பாண்டிங் பரபர!

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே அடித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. எனினும் ராஜஸ்தான் அணி வீரர்கள் மில்லர் மற்றும் கிறிஸ் மோரிஸுன் உதவியால் அந்த அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

வாய்ப்பு பெறாத அஸ்வின்

வாய்ப்பு பெறாத அஸ்வின்

இந்த போட்டியில் டெல்லி அணி சுலபமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒன்று. ஏனென்றால் வேகப்பந்துவீச்சாளர்களால் முதல் 5 விக்கெட்கள் மலமலவென வீழ்ந்தது. ஆனால் அஸ்வினை நம்பாமல் 3 ஓவர்கள் மட்டுமே பண்ட் கொடுத்தார். அதற்கு பதிலாக அவர் வாய்ப்பு கொடுத்த ஸ்டோய்னிஸ் ஒரே ஓவரில் ரன்களை வாரி வழங்கினார். இவர் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரில் மில்லர் 3 பவுண்டரிகள் அடித்து ஃபார்முக்கு திரும்பினார். ஆனால் சிறப்பாக பந்துவீசிய அஸ்வினோ 3 ஓவர்கள் வீசியும் 14 ரன்களையே விட்டுக்கொடுத்திருந்தார்.

நெஹ்ரா நம்பிக்கை

நெஹ்ரா நம்பிக்கை

இதுகுறித்து பேசியுள்ள அசிஷ் நெஹ்ரா, அஸ்வின் வெறும் 3 ஓவர்கள் மட்டுமே வீசினார். முதல் 5 விக்கெட்கள் வீழ்ந்த போது இடது கை வீரர்கள் டேவிட் மில்லர் - ராகுல் தேவட்டியா ஆகியோரே களத்தில் உள்ளனர். அந்த நேரத்தில் அஸ்வினை பயன்படுத்தியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் அவர் நிச்சயம் ஒரு விக்கெட் எடுத்திருப்பார்.

வெற்றி

வெற்றி

ஒரு வேளை களத்தில் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் ஆகியோர் பேட்டிங் செய்து ஓவருக்கு 9 -10 ரன்கள் தான் வேண்டும் என்ற நிலை இருந்திருந்தால் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்காமல் இருந்திருக்கலாம். ஏனென்றால் அப்போது சிக்ஸர் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்று இடதுகை வீரர்கள் உள்ள சூழலில் மார்கஸ் ஸ்டோய்னிஸுக்கு பதிலாக அஸ்வினிடம் பந்தை கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 16, 2021, 17:08 [IST]
Other articles published on Apr 16, 2021
English summary
Ashish Nehra questions Pant's captaincy after Rajasthan royals thrill win
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X