For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போச்சு.. போச்சு.. அஸ்வினுக்கு இனி வாய்ப்பே இல்லை.. கோலிக்கு போன மெசேஜ்.. போட்ட திட்டமெல்லாம் காலி!

சென்னை: நேற்று சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று இருந்தாலும் கூட டெல்லி அணியின் வீரர் அஸ்வினுக்கு அவரின் தனிப்பட்ட ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணி மிக மோசமாக ஆடி மண்ணை கவ்வி உள்ளது. சென்னை அணியின் பவுலிங்தான் நேற்றைய தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

பேட்ஸ்மேன்கள் உயிரை கொடுத்து நேற்று ஆடியும் கூட பவுலிங் சொதப்பியதால் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. டாஸ் தோல்வி அடைந்ததும் கூட நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பியது.

சென்னை

சென்னை

நேற்று போட்டியில் சென்னை அணியின் பவுலிங் போலவே டெல்லி அணியின் பவுலிங்கும் மோசமாகவே இருந்தது. முக்கியமாக டெல்லி ஸ்பின் பவுலர்கள் அமித் மிஸ்ரா, அஸ்வின் சரியாக வீசவில்லை. அவேஷ் கான், டாம் கரன் இருவரும்தான் கொஞ்சம் சுமாராக பவுலிங் செய்தனர். முக்கியமாக அஸ்வின் பவுலிங் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது.

வேரியேஷன்

வேரியேஷன்

எப்போதும் பவுலிங்கில் வேரியேஷன் காட்டும் அஸ்வின் நேற்று மோசமாக சொதப்பினார். அவரின் பவுலிங் ஸ்டைலில் வேரியேஷன் இருந்ததே தவிர, பவுலிங்கில் தனிப்பட்ட வகையில் வேரியேஷன் இல்லை. சரியான லைனில் போட முடியாமல் அஸ்வின் திணறினார். பந்து பெரிதாக ஸ்விங் ஆகவும் இல்லை.

அஸ்வின்

அஸ்வின்

எப்போதும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு நன்றாக பவுலிங் செய்யும் அஸ்வின் நேற்று இடதுகை பேட்ஸ்மேன்களிடம்தான் மோசமாக சுருண்டார். நேற்று 4 ஓவர் வீசிய அஸ்வின் 47 ரன்கள் கொடுத்தார். ஒவ்வொரு ஓவருக்கும் கிட்டத்தட்ட 11 ரன்களுக்கும் அதிகமாக கொடுத்தார்.

ஸ்பின்

ஸ்பின்

நேற்று அஸ்வினின் ஸ்பின் மேஜிக் சுத்தமாக வேலை செய்யவில்லை. பிட்ச் இவருக்கு எதிராக இருந்தது. இந்த ஐபிஎல் தொடர் மூலம் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணையலாம் என்று அஸ்வின் நினைத்தார். ஆனால் முதல் ஆட்டமே அஸ்வினுக்கு எதிராக சென்றுள்ளது.

பிளான் காலி

பிளான் காலி

ஐபிஎல் மூலம் தன்னை நிரூபிக்கலாம் என்ற அஸ்வினின் பிளான் காலியாகி உள்ளது. கண்டிப்பாக நேற்று போட்டியில் அஸ்வினின் மோசமான ஆட்டத்தை கோலி பார்த்து இருப்பார். அஸ்வினை விட வாஷிங்க்டன் சுந்தர் நன்றாகவே பவுலிங் செய்கிறார்.

சுந்தர் பேட்டிங்

சுந்தர் பேட்டிங்

அதோடு சுந்தரின் பேட்டிங்கும் சிறப்பாக இருக்கிறது. இதனால் அஸ்வினை விட சுந்தர்தான் கோலியின் முதல் சாய்சாக கண்டிப்பாக இருப்பார். எனவே டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடும் அஸ்வினின் கனவு கனவாகவே போக வாய்ப்புள்ளது.

Story first published: Sunday, April 11, 2021, 15:00 [IST]
Other articles published on Apr 11, 2021
English summary
IPL 2021: Ashwin bowling was not up to the mark in the DC vs CSK match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X