இதுதான் கடைசி வாய்ப்பு.. மொத்தமாக வாழ்க்கையே மாற போகிறது.. அஸ்வினின் மாஸ்டர்பிளான்.. பரபர பின்னணி!

சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கு பின் தமிழக வீரர் அஸ்வினின் கிரிக்கெட் கெரியர் மொத்தமாக மாறிவிடும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

2021 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை நடக்க உள்ளது. நாளை பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் முதல் போட்டி நடக்க உள்ளது.

அதற்கு அடுத்து சென்னைக்கும் டெல்லிக்கும் இடையில் மேட்ச் நடக்க உள்ளது. ரிஷாப் பண்ட் டெல்லி கேப்டனாக இருக்கும் இந்த போட்டி அதிக சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி

டெல்லி

இந்த ஐபிஎல் தொடர் அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டி போடும் என்கிறார்கள். தற்போது இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் மிக முக்கியமான வீரராக இருக்கிறார். பவுலிங்கில் சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் இவர் 4 விக்கெட்டுகளை எடுக்கிறார்.

4 விக்கெட்

4 விக்கெட்

அதோடு தற்போது பேட்டிங்கிலும் அஸ்வின் கலக்கி வருகிறார். ஆனால் எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் அஸ்வின் இன்னும் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஆட தேர்வு செய்யப்படவில்லை. தற்போது இந்திய அணியில் ஒருநாள், டி 20 போட்டிகளில் ஸ்பின் பவுலின் செய்ய சுந்தர், சாஹல் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

இல்லை

இல்லை

குல்தீப் யாதவ் பலமுறை வாய்ப்பு கொடுத்தும் சரியாக ஆடவில்லை. இதனால் இந்த ஐபிஎல் தொடரில் சரியாக ஆடுவதன் மூலம் அஸ்வின் மீண்டும் குறைந்த ஓவர் போட்டிகளில் கம்பேக் கொடுக்க முடியும். இந்த ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடுவதன் மூலம் அஸ்வின் மீண்டும் ஒருநாள் மட்டும் டி 20 போட்டிகளில் இந்திய அணியில் வாய்ப்பு பெற முடியும்.

மாறும்

மாறும்

இந்த ஐபிஎல் தொடர் மூலம் உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணியில் இணைவதற்கான வாய்ப்பு அஸ்வினுக்கு கூடி வந்துள்ளது. அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை இந்த போட்டி கண்டிப்பாக புரட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பண்ட் கேப்டனாக இருப்பதால் அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்ய முடியும்.

அஸ்வின்

அஸ்வின்

இந்த ஐபிஎல் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய அஸ்வின் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். டெஸ்ட் போட்டியில் கலக்கியது போல ஐபிஎல் தொடரிலும் அஸ்வின் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Ravinchandran Ashwin cricket carrier may change completely change after this season.
Story first published: Thursday, April 8, 2021, 16:55 [IST]
Other articles published on Apr 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X