For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவ்ளோ கஷ்டமா.. கொரோனாவால் அஸ்வின் சந்தித்த சிக்கல்கள்.. ரசிகர்களிடம் மனம் திறப்பு!

சென்னை: கொரோனாவால் தான் சந்தித்த பிரச்னைகள் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்துரைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் 2ம் அலையில் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் ஆயிரகணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இனி எப்படி ஐபிஎல் நஷ்டமாகும்.. ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஒற்றை அறிவிப்பு.. குஷியில் முதலீட்டாளார்கள்! இனி எப்படி ஐபிஎல் நஷ்டமாகும்.. ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஒற்றை அறிவிப்பு.. குஷியில் முதலீட்டாளார்கள்!

இதற்காக சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்போது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதில் இணைந்துள்ளார்.

அஸ்வின் விலகல்

அஸ்வின் விலகல்

கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்னதாகவே டெல்லி அணி வீரர் அஸ்வின் தொடரில் இருந்து வெளியேறினார். இவரை தொடர்ந்துதான் அடுத்தடுத்து வெளியேறினர். தனது குடும்பத்தார் பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் வெளியேறும் முடிவை எடுத்தார்.

பாதிப்பு

பாதிப்பு

இவர் தற்போது குடும்பத்தாருக்கு நேர்ந்த பாதிப்புகள் குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தேன். அப்போது எனது குழந்தைகளுக்கு தீவிர காய்ச்சல் மற்றும் 3 - 4 நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. என் மனைவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மருந்துகளை கொடுத்துள்ளார். எனினும் காய்ச்சல் குறையவில்லை.

தடுப்பூசி

தடுப்பூசி

பின்னர் என் மொத்த குடும்பத்திற்கும் உடல்நிலை பாதித்தது. என் தந்தை முதல் 5 நாட்கள் நன்றாக தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு அவரின் ஆக்சிஜன் அளவு குறைந்துகொண்டே போனது. அவரின் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கவே இல்லை. பின்னர் 2 கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட பிறகு தான் குணமடைந்தார். நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன், தந்தையை காப்பாற்ற முக்கிய காரணமாக இருந்தது அந்த தடுப்பூசி மட்டும் தான்.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

நீங்கள் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களால் உங்கள் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். குழந்தைகள் என்றும் அது பார்க்காது, உடனடியாக பாதிக்கும். இந்த கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும் தான். எனவே தயவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

Story first published: Sunday, May 9, 2021, 17:24 [IST]
Other articles published on May 9, 2021
English summary
Ashwin shares his personal experience with Corona
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X