For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு போட்டிதான்..ஒட்டுமொத்த தலையெழுத்தும் மாறியது.. ஹாட்ரிக் நாயகனை தட்டித்தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் : உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய இளம் பந்துவீச்சாளரை ஐபிஎல் தொடருக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி தட்டித்தூக்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், அணி வீரர்களுக்கான பிரச்னை இன்னும் குழப்பத்திலேயே தான் உள்ளது.

நேற்று மாலை 5 மணிக்கு அணி வீரர்களின் பட்டியலை சமர்பிக்க பிசிசிஐ உத்திரவிட்ட போது, பல அணிகள் அதனை செய்யவில்லை.

பிசிசிஐ விதித்த காலக்கெடு.. ஐபிஎல் அணிகளுக்கு வந்தது புது தலைவலி.. தற்போதைக்கு முடியாது போல! பிசிசிஐ விதித்த காலக்கெடு.. ஐபிஎல் அணிகளுக்கு வந்தது புது தலைவலி.. தற்போதைக்கு முடியாது போல!

 நீடிக்கும் சிக்கல்

நீடிக்கும் சிக்கல்

ஐபிஎல் தொடர் அக்டோபர் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. அது முடிவடைந்த அடுத்த இரண்டு நாட்களில் , அதாவது அக்டோபர் 17ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் அதற்காக திட்டமிட்டு வருகின்றனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் வீரர்களுக்கு அனுமதி கொடுத்துள்ள போது, வீரர்கள் இன்னும் குழப்பத்திலேயே தான் உள்ளனர்.

4 ஆஸ்திரேலிய வீரர்கள்

4 ஆஸ்திரேலிய வீரர்கள்

அந்தவகையில் அஸ்திரேலியாவை சேர்ந்த 4 வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் கலந்துக்கொள்ளப்போவதில்லை என அறிவிப்பு வெளியானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிக முக்கியமான வீரராக பேட் கம்மின்ஸ், பஞ்சாப் அணியை சேர்ந்த ரைலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணியை சேர்ந்த கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் ஐபிஎல்- ல் பங்கேற்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

நாதன் எல்லீஸ்

நாதன் எல்லீஸ்

இந்நிலையில் ரைலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸ் ஆகியோருக்கு மாற்றாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் எல்லீஸை பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. நாதன் எல்லீஸ் ஏற்கனவே ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலத்தில் அடிப்படை தொகை ரூ.20 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டார். ஆனால் அப்போது ஒரு அணி கூட அவரை கண்டுக்கொள்ளவில்லை. தற்போது அவருக்காக அணிகள் போட்டிப்போட்டுக்கொண்டுள்ள நிலை உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் அவர் வங்கதேசத்திற்கு எதிராக போட்ட பந்துவீச்சு தான்.

ஹாட்ரிக் நாயகன்

ஹாட்ரிக் நாயகன்

பிக் பேஸ் தொடரில் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை கவனத்தை ஈர்த்த நாதன் எல்லீஸ், கடந்த ஆகஸ்ட் 6ம் தேதியன்று தான் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். வங்கதேசத்திற்கு எதிரான அந்த போட்டியில் எல்லிஸ், அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் சாதனை படைத்தார். இதே போல டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த 3வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்னர் ப்ரெட் லீ, ஆஷ்டன் ஆகர் ஆகியோர் ஹாட்ரிக் எடுத்துள்ளனர்.

 பலன்கள்

பலன்கள்

இந்த சூழலில் தான் அவரை சரியாக தட்டித்தூக்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. நாதன் தற்போது அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார். அது மட்டுமல்லாமல், நாதனின் பந்துவீச்சு ஸ்டைல் குறித்து ஐபிஎல் தொடரில் எந்தவொரு வீரருக்கு அவ்வளவு சரியாக தெரியாது. எனவே அவரின் பவுலிங்கை வைத்து ஈசியாக விக்கெட்களை அள்ள பஞ்சாப் அணி முடிவெடுத்துவிட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல் நாதன் எல்லீஸுக்கும் இதில் ஒரு நன்மை உள்ளது. அதாவது அவர் ஆஸ்திரேலியாவின் டி20 உலகக்கோப்பை அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே இந்த ஐபிஎல் அவருக்கு நிச்சயமாக ஒரு பயிற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, August 21, 2021, 14:20 [IST]
Other articles published on Aug 21, 2021
English summary
Australian Bowler Nathan Ellis was Signed by Punjab Kings for the second of IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X